• Oct 18 2025

திருகோணமலை நகரில் ‘சரோஜா’ சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம்!

shanuja / Oct 18th 2025, 4:51 pm
image

திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இன்று (18) இடம்பெற்றது.


சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற வாசகம் அடங்கியதும் அவசர சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான முறைப்பாடுகளை தெரிவிக்க 109,107 ஹொட்லைன் இலக்கம் அடங்கிய ஸ்டிக்கர்களும் திருகோணமலை நகரில் உள்ள முச்சக்கர வண்டியில் ஒட்டப்பட்டு விழிப்பூட்டப்பட்டது.


இதில் கிழக்கு மாகாண சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர கலந்து சிறப்பித்தார்.


இந்த நிகழ்வில் ‘சரோஜா’ என்ற பெயரில், சிறுவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வாகனங்களுக்கு ஸ்டிக்கர்களும் சிறுவர் பாதுகாப்பு குறித்தும் இதன் போது  தெளிவூட்டப்பட்டது.இதில் திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை நகரில் ‘சரோஜா’ சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம் திருகோணமலை நகரில் சரோஜா சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இன்று (18) இடம்பெற்றது.சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுங்கள் என்ற வாசகம் அடங்கியதும் அவசர சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான முறைப்பாடுகளை தெரிவிக்க 109,107 ஹொட்லைன் இலக்கம் அடங்கிய ஸ்டிக்கர்களும் திருகோணமலை நகரில் உள்ள முச்சக்கர வண்டியில் ஒட்டப்பட்டு விழிப்பூட்டப்பட்டது.இதில் கிழக்கு மாகாண சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர கலந்து சிறப்பித்தார்.இந்த நிகழ்வில் ‘சரோஜா’ என்ற பெயரில், சிறுவர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வாகனங்களுக்கு ஸ்டிக்கர்களும் சிறுவர் பாதுகாப்பு குறித்தும் இதன் போது  தெளிவூட்டப்பட்டது.இதில் திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement