காருடன் மோதிய பேருந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் பேருந்து சாரதி காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் புத்தளம் - ஆனமடுவ நவகத்தேகம பொத்திக்கட்டுவ ஆறுக்கரையிலுள்ள பாலத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியில் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று காருடன் மோதியதில் பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது.
விபத்தில் பேருந்து சாரதி காயமடைந்து ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காருடன் மோதி வீதியை விட்டு விலகி கவிழ்ந்த பேருந்து; காயத்துடன் உயிர்தப்பிய சாரதி - புத்தளத்தில் விபத்து காருடன் மோதிய பேருந்து வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் பேருந்து சாரதி காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். இந்த விபத்துச் சம்பவம் புத்தளம் - ஆனமடுவ நவகத்தேகம பொத்திக்கட்டுவ ஆறுக்கரையிலுள்ள பாலத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியில் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று காருடன் மோதியதில் பேருந்து வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் பேருந்து சாரதி காயமடைந்து ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.