• Oct 18 2025

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத சம்பளமாக 54 ஆயிரம் ரூபா வேண்டும்!

shanuja / Oct 18th 2025, 3:08 pm
image

எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்ற வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளமாக 54 ஆயிரம் ரூபா  நிர்ணயிக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தொழில் ஆணையாளரால் அழைக்கப்பட்ட சம்பள நிர்ணய சபை கூட்டத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் சமூக மளிக்காதது அவர்கள் தாங்களுக்காக உழைக்கின்ற தொழிலாளர் சமூகத்தின்மேல் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.


தாங்களுக்காக உழைத்துக் கொடுக்கின்ற தொழிலாளர்களை மதிக்க முடியாவிட்டால் தோட்டங்களை தொழிலாளர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறுவதுதான் பொருத்தமானதாகும். உற்பத்தி அடிப்படையிலான சம்பள உயர்வு என்பது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கேட்டு புளித்துப் போன விடயமாகும். இது ஏற்றுக் கொள்ள முடியாதாகும்.


ஊட்டச்சத்து இல்லாத பழைய தேயிலை செடிகளை வைத்துக்கொண்டு எவ்வாறு உற்பத்திகளை அதிகரிக்க முடியும்? முதலாளிமார் சம்மேளனம் இலங்கையின் தேயிலைத் துறையை வெளிநாடுகளுடன் அடிக்கடி ஒப்பிட்டு காட்டுகிறது. பறிக்கப்படும் கொழுந்தின் அளவு ஒப்பிட்டு காட்டப்படுகிறது.


ஆனால் வெளிநாடுகளில் தேயிலை செடிகள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறன என்பதை முதலாளிமார் சம்மேளனம் சென்று பார்த்து விட்டு வர வேண்டும். அங்கு தேயிலை செடிகளுக்கு எவ்வாறு உரமிடப்படுகின்றன. எவ்வாறு ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகின்றன. பழைய தேயிலை செடிகளுக்கு பதிலாக மீள்நடுகைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன.


என்பதுடன் சேர்த்து விளைச்சல் அளவையும் நோக்க வேண்டும். முதலீடுகளை அதிகரித்து உற்பத்தியை அதிகரித்துக் காட்டிய பின். உற்பத்தி அடிப்படையான சம்பளம் பற்றி ஆலோசிக்க முடியும். தேயிலை செடிகளில் கொழுந்து வராவிட்டால் அதற்குத் தோட்ட தொழிலாளர்களால் என்ன செய்ய முடியும்?


முதலாளிமார் சம்பளம் யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். எது எவ்வாறினும் தொழில் ஆணையாளர் கூட்டிய சம்பள நிர்ணய சபை கூட்டத்திற்கு புற முதுகை காட்டுவது முதலாளிமார் சம்மேளனத்தின் தன்னிச்சையான எவரையும் மதிக்காத தான்தோற்றி தனத்தை காட்டுகிறது. இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.


அதேபோல கடந்த சம்பள நிர்ணய சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1700 ரூபாய் சம்பள உயர்வை கோரியது. அவ்வேளையில் 2138 ரூபாவுக்கு குறைந்த சம்பளத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என வீராப்பு பேசிய தற்போதைய அரசாங்கத்தின் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் சம்பள நிர்ணய சபைக்கு வராமல் ஒளிந்து கொண்டது ஏன்? எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு ஆளும் கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு ஏன்? அன்று ஆட்சியைப் பிடிப்பதற்கு அந்த நிலைப்பாடு.


இன்று முதலாளிமார் சம்மேளனத்திற்கு. வால் பிடிப்பதற்கு இந்த நிலைப்பாடு. கடந்த முறை நாம் முன்வைத்த 1700 ரூபாய் சம்பளத்துக்கு ஆளும் கட்சியின் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கமும். இன்று சம்பளத்துக்காக நீதிமன்றத்திற்கு செல்கின்றோம் என்று சொல்லுகின்ற தொழிற்சங்கங்களும் சாதகமாக வாக்களித்திருந்தால். அன்றே 1700 ரூபாவை பெற்றிருக்க முடியும். இவர்கள் அரசியல் தொழிற்சங்க நலன்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு தங்களுடைய மனசாட்சியை தொட்டு தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.


எப்போதுமே தொழிலாளர்களின் நலன்களுக்காக செயற்பட்டு வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசை வசைப்பாடி வரும் இவர்களின் உண்மையான வேஷம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. எம்மை துரோகிகள் காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொன்னவர்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது தோட்டத்து தொழிலாளர்களை கட்டிக் காத்தவர்களாக ஏன் மாறவில்லை.


வார்த்தை ஜாலங்களில் மூலம் எம்மை வசைபாட முடியும். ஆனால் தோட்ட தொழிலாளர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது அவ்வளவு இலகுவானதல்ல. இந்த கடினமான பணியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்திருக்கிறது.


தோட்டத் தொழிலாளர்களுக்காக ஏற்றுக் கொள்ளக்கூடிய பொருத்தமான சம்பளத் தொகை முன்வைக்கப்படுகின்ற போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் லாபத்தையும் தொழிற்சங்க நலன்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு சம்பள உயர்வுக்காக இணைந்து செயல்பட தயாராக இருக்கிறது.


எனினும் கண்களில் தொகையை காட்டி விட்டு பெற்றுக் கொள்வதற்கு முடியாத அளவில் சம்பளம் முறை தீர்மானிக்க முற்பட்டால் அதை போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பகுதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை மாத சம்பளமாக 54 ஆயிரம் ரூபா வேண்டும் எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கப்பட இருக்கின்ற வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளமாக 54 ஆயிரம் ரூபா  நிர்ணயிக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தொழில் ஆணையாளரால் அழைக்கப்பட்ட சம்பள நிர்ணய சபை கூட்டத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் சமூக மளிக்காதது அவர்கள் தாங்களுக்காக உழைக்கின்ற தொழிலாளர் சமூகத்தின்மேல் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.தாங்களுக்காக உழைத்துக் கொடுக்கின்ற தொழிலாளர்களை மதிக்க முடியாவிட்டால் தோட்டங்களை தொழிலாளர்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியேறுவதுதான் பொருத்தமானதாகும். உற்பத்தி அடிப்படையிலான சம்பள உயர்வு என்பது கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக கேட்டு புளித்துப் போன விடயமாகும். இது ஏற்றுக் கொள்ள முடியாதாகும்.ஊட்டச்சத்து இல்லாத பழைய தேயிலை செடிகளை வைத்துக்கொண்டு எவ்வாறு உற்பத்திகளை அதிகரிக்க முடியும் முதலாளிமார் சம்மேளனம் இலங்கையின் தேயிலைத் துறையை வெளிநாடுகளுடன் அடிக்கடி ஒப்பிட்டு காட்டுகிறது. பறிக்கப்படும் கொழுந்தின் அளவு ஒப்பிட்டு காட்டப்படுகிறது.ஆனால் வெளிநாடுகளில் தேயிலை செடிகள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறன என்பதை முதலாளிமார் சம்மேளனம் சென்று பார்த்து விட்டு வர வேண்டும். அங்கு தேயிலை செடிகளுக்கு எவ்வாறு உரமிடப்படுகின்றன. எவ்வாறு ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படுகின்றன. பழைய தேயிலை செடிகளுக்கு பதிலாக மீள்நடுகைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன.என்பதுடன் சேர்த்து விளைச்சல் அளவையும் நோக்க வேண்டும். முதலீடுகளை அதிகரித்து உற்பத்தியை அதிகரித்துக் காட்டிய பின். உற்பத்தி அடிப்படையான சம்பளம் பற்றி ஆலோசிக்க முடியும். தேயிலை செடிகளில் கொழுந்து வராவிட்டால் அதற்குத் தோட்ட தொழிலாளர்களால் என்ன செய்ய முடியும்முதலாளிமார் சம்பளம் யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். எது எவ்வாறினும் தொழில் ஆணையாளர் கூட்டிய சம்பள நிர்ணய சபை கூட்டத்திற்கு புற முதுகை காட்டுவது முதலாளிமார் சம்மேளனத்தின் தன்னிச்சையான எவரையும் மதிக்காத தான்தோற்றி தனத்தை காட்டுகிறது. இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.அதேபோல கடந்த சம்பள நிர்ணய சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1700 ரூபாய் சம்பள உயர்வை கோரியது. அவ்வேளையில் 2138 ரூபாவுக்கு குறைந்த சம்பளத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என வீராப்பு பேசிய தற்போதைய அரசாங்கத்தின் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் சம்பள நிர்ணய சபைக்கு வராமல் ஒளிந்து கொண்டது ஏன் எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு ஆளும் கட்சியில் இருக்கும் போது ஒரு நிலைப்பாடு ஏன் அன்று ஆட்சியைப் பிடிப்பதற்கு அந்த நிலைப்பாடு.இன்று முதலாளிமார் சம்மேளனத்திற்கு. வால் பிடிப்பதற்கு இந்த நிலைப்பாடு. கடந்த முறை நாம் முன்வைத்த 1700 ரூபாய் சம்பளத்துக்கு ஆளும் கட்சியின் இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கமும். இன்று சம்பளத்துக்காக நீதிமன்றத்திற்கு செல்கின்றோம் என்று சொல்லுகின்ற தொழிற்சங்கங்களும் சாதகமாக வாக்களித்திருந்தால். அன்றே 1700 ரூபாவை பெற்றிருக்க முடியும். இவர்கள் அரசியல் தொழிற்சங்க நலன்களை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு தங்களுடைய மனசாட்சியை தொட்டு தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.எப்போதுமே தொழிலாளர்களின் நலன்களுக்காக செயற்பட்டு வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசை வசைப்பாடி வரும் இவர்களின் உண்மையான வேஷம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. எம்மை துரோகிகள் காட்டிக் கொடுத்தவர்கள் என்று சொன்னவர்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது தோட்டத்து தொழிலாளர்களை கட்டிக் காத்தவர்களாக ஏன் மாறவில்லை.வார்த்தை ஜாலங்களில் மூலம் எம்மை வசைபாட முடியும். ஆனால் தோட்ட தொழிலாளர்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவது அவ்வளவு இலகுவானதல்ல. இந்த கடினமான பணியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்திருக்கிறது.தோட்டத் தொழிலாளர்களுக்காக ஏற்றுக் கொள்ளக்கூடிய பொருத்தமான சம்பளத் தொகை முன்வைக்கப்படுகின்ற போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் லாபத்தையும் தொழிற்சங்க நலன்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு சம்பள உயர்வுக்காக இணைந்து செயல்பட தயாராக இருக்கிறது.எனினும் கண்களில் தொகையை காட்டி விட்டு பெற்றுக் கொள்வதற்கு முடியாத அளவில் சம்பளம் முறை தீர்மானிக்க முற்பட்டால் அதை போதும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பகுதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement