நாவலப்பிட்டி பகுதியில் தோட்ட நிர்வாகம் வேலை வழங்க மறுத்ததால், தொழிலாளி கே. கோபாலகிருஸ்ணனுக்கு 31 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு தொழில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஊழியர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ். முருகையா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு (ஜனவசம) சொந்தமான நாவலப்பிட்டி கந்தலோயா தோட்டத்தில் கே. கோபாலகிருஸ்ணன் என்பவர் 1999 முதல் காவல் வேலை செய்து வந்துள்ளார்.
இவர் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் 2021 நவம்பர் முதலாந் திகதி கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கபட்டிருந்தார்.
எனினும், ஆறு மாதங்களின் பின்னர் வேலைக்குச் சென்ற அவருக்கு தோட்ட நிர்வாகம் வேலை வழங்க மறுத்திருந்தது.
இதன்படியில் அகில இலங்கை ஐக்கிய ஊழியர் காங்கிரசின் பொதுச் செயலாளர் எஸ். முருகையா வழக்கை கைப்பற்றி, பல தடவைகள் விசாரணை நடந்தது.
இறுதியாக இது தொடர்பான விசாரணை நாவலப்பிட்டி தொழில் நீதிமன்ற நீதிவான் திருமதி வீ. டபுள்யூ. விஜயவர்தன முன்னிலையில் இடம்பெற்றது.
2025 ஒக்டோபர் 10 இல் தீர்ப்பு வழங்கப்பட்ட போது, கோபாலகிருஸ்ணனின் வேலை நிறுத்தம் உறுதி செய்யப்படவில்லை என்றும்,
அவர் 60 வயது வரை வேலை செய்யும் வாய்ப்பை இழந்துள்ளதால் மாதாந்தம் 26,000 ரூபா வீதம் 10 வருட சம்பளமாக மொத்தம் 31 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி தொழிலாளி ஒருவருக்கு 31 லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தீர்ப்பு நாவலப்பிட்டி பகுதியில் தோட்ட நிர்வாகம் வேலை வழங்க மறுத்ததால், தொழிலாளி கே. கோபாலகிருஸ்ணனுக்கு 31 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறு தொழில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஊழியர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ். முருகையா தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு (ஜனவசம) சொந்தமான நாவலப்பிட்டி கந்தலோயா தோட்டத்தில் கே. கோபாலகிருஸ்ணன் என்பவர் 1999 முதல் காவல் வேலை செய்து வந்துள்ளார். இவர் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் 2021 நவம்பர் முதலாந் திகதி கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் பிணையில் விடுவிக்கபட்டிருந்தார். எனினும், ஆறு மாதங்களின் பின்னர் வேலைக்குச் சென்ற அவருக்கு தோட்ட நிர்வாகம் வேலை வழங்க மறுத்திருந்தது.இதன்படியில் அகில இலங்கை ஐக்கிய ஊழியர் காங்கிரசின் பொதுச் செயலாளர் எஸ். முருகையா வழக்கை கைப்பற்றி, பல தடவைகள் விசாரணை நடந்தது. இறுதியாக இது தொடர்பான விசாரணை நாவலப்பிட்டி தொழில் நீதிமன்ற நீதிவான் திருமதி வீ. டபுள்யூ. விஜயவர்தன முன்னிலையில் இடம்பெற்றது. 2025 ஒக்டோபர் 10 இல் தீர்ப்பு வழங்கப்பட்ட போது, கோபாலகிருஸ்ணனின் வேலை நிறுத்தம் உறுதி செய்யப்படவில்லை என்றும், அவர் 60 வயது வரை வேலை செய்யும் வாய்ப்பை இழந்துள்ளதால் மாதாந்தம் 26,000 ரூபா வீதம் 10 வருட சம்பளமாக மொத்தம் 31 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.