தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லும் வசதிக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இன்று (ஒக்டோபர் 18), கொழும்பின் புறக்கோட்டையிலிருந்து (Pettah) ஹட்டன், பதுளை, நுவரெலியா, மஸ்கெலியா, நானுஓயா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு மேலதிகமாக 75 பேருந்துகள் சேவையில் உள்ளன.
நாளை (ஒக்டோபர் 19) இவற்றுக்கு மேலதிகமாக 73 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இன்றும் நாளையும் (ஒக்டோபர் 18 மற்றும் 19) தொடருந்து சேவைகள் வழமைபோல இயங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ஊவா, சபரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு அடுத்தடுத்த நாள் (ஒக்டோபர் 21) விடுமுறை வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஷேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லும் வசதிக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.அதன்படி, இன்று (ஒக்டோபர் 18), கொழும்பின் புறக்கோட்டையிலிருந்து (Pettah) ஹட்டன், பதுளை, நுவரெலியா, மஸ்கெலியா, நானுஓயா, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு மேலதிகமாக 75 பேருந்துகள் சேவையில் உள்ளன. நாளை (ஒக்டோபர் 19) இவற்றுக்கு மேலதிகமாக 73 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இன்றும் நாளையும் (ஒக்டோபர் 18 மற்றும் 19) தொடருந்து சேவைகள் வழமைபோல இயங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், ஊவா, சபரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு அடுத்தடுத்த நாள் (ஒக்டோபர் 21) விடுமுறை வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.