• Sep 22 2026

மலைநாட்டில் கனமழை… நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

Aathira / Sep 21st 2026, 7:19 pm
image

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் 77 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 113.6 புள்ளியாக பதிவாகியுள்ளது.

அதன் முழு கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் 6.4 புள்ளி நீர்மட்டம் அதிகரிக்க வேண்டியுள்ளது.

அதேபோல், கென்யோன் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 50.11 மீட்டராக பதிவாகியுள்ளது.

அதன் முழு கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் 5.01 மீட்டர் நீர்மட்டம் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், மலைநாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலைநாட்டில் கனமழை… நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.கடந்த இரண்டு நாட்களாக நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் 77 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக நீர்த்தேக்கத்துக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 113.6 புள்ளியாக பதிவாகியுள்ளது.அதன் முழு கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் 6.4 புள்ளி நீர்மட்டம் அதிகரிக்க வேண்டியுள்ளது.அதேபோல், கென்யோன் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 50.11 மீட்டராக பதிவாகியுள்ளது.அதன் முழு கொள்ளளவை எட்டுவதற்கு மேலும் 5.01 மீட்டர் நீர்மட்டம் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மழை பெய்து வருவதால், மலைநாட்டின் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement