• Nov 19 2024

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை!

Tamil nila / Nov 17th 2024, 7:36 am
image

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

 அதேநேரம் மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும். 

 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். 

 அத்துடன் மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 இதேவேளை இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  அதேநேரம் மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில இடங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.  அத்துடன் மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதேவேளை இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement