• Mar 15 2026

வடக்கில் இன்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு; எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு!

shanu / Oct 6th 2025, 5:42 pm
image

இடிமின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு இன்று இரவு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 


வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது,   


வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​குறித்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். 


மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


உதாரணமாக பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தொலைபேசி பாவனையை தவிர்த்தல், மின்சாதன பொருட்களை பாவிப்பதை தவிர்த்தல், மரங்களின் கீழ் நிற்பதையும், வயல் நிலங்களில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இன்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு; எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு இடிமின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு இன்று இரவு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது,   வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​குறித்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தொலைபேசி பாவனையை தவிர்த்தல், மின்சாதன பொருட்களை பாவிப்பதை தவிர்த்தல், மரங்களின் கீழ் நிற்பதையும், வயல் நிலங்களில் நிற்பதையும் தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement