• Feb 15 2026

பலத்த மின்னலுடன் மழை பெய்யும்; மேல் மாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

Chithra / Jan 14th 2026, 1:34 pm
image


பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 


இந்த அறிவிப்பு இன்று (14) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும். 


மேல் மாகாணத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். 


மேலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.


நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.


மன்னார் தொடக்கம் ‌காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். 


நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 - 40 km  வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து வடகிழக்காக காற்று வீசும்.  


புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாக் காணப்படும்.


இதன் காரணமாக, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

பலத்த மின்னலுடன் மழை பெய்யும்; மேல் மாகாணத்திற்கு சிவப்பு எச்சரிக்கை பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (14) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும். மேல் மாகாணத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். மேலும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.மன்னார் தொடக்கம் ‌காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 - 40 km  வேகத்தில் கிழக்குத் திசையில் இருந்து வடகிழக்காக காற்று வீசும்.  புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாக் காணப்படும்.இதன் காரணமாக, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement