மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த பலத்த மழையால் கடந்த 24 மணித்தியாலங்களில் 47.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று (02) பிற்பகல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததுடன், தென்கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்குலைவு காரணமாக மாவட்டத்தின் கடற்பரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலுக்குச் செல்லாமல் இருந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியதுடன், கடலின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதேவேளை, இன்று (03) காலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வானிலை மேகமூட்டத்துடனும் மந்தாரமாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த பலத்த மழையால் கடந்த 24 மணித்தியாலங்களில் 47.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.நேற்று (02) பிற்பகல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததுடன், தென்கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்குலைவு காரணமாக மாவட்டத்தின் கடற்பரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக வானிலை எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலுக்குச் செல்லாமல் இருந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியதுடன், கடலின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இதேவேளை, இன்று (03) காலை முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் வானிலை மேகமூட்டத்துடனும் மந்தாரமாகவும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.