நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் காற்று அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
எனினும், சென்னையில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி பனியின் தாக்கம் அதிகரித்தது.
இந்த நிலையில், சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலில், தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு தென் தமிழக பகுதிகளில் அநேகமான இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை மற்றும் அடைமழை எச்சரிக்கையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவடடங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் இன்றிரவும் கடும் மழைக்கு சாத்தியம் - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.samugammedia நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் காற்று அதிகரித்து வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதனிடையே தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.எனினும், சென்னையில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி பனியின் தாக்கம் அதிகரித்தது.இந்த நிலையில், சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணலில், தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக அடுத்து வரும் 5 நாட்களுக்கு தென் தமிழக பகுதிகளில் அநேகமான இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.கனமழை மற்றும் அடைமழை எச்சரிக்கையை பொறுத்தவரையில் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவடடங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.