• Sep 20 2024

பலத்த மழை - நீரில் மூழ்கிய கொழும்பின் பல பகுதிகள்..! samugammedia

Chithra / Oct 17th 2023, 3:36 pm
image

Advertisement

 

நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.

அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக, இதுவரை 2 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை பெய்த பலத்த மழைக் காரணமாக கொழும்பு, மருதானை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சில வீதிகள் நீரில் மூழ்கியிருந்ததாக தெரியவருகின்றது.


பலத்த மழை - நீரில் மூழ்கிய கொழும்பின் பல பகுதிகள். samugammedia  நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் கோரியுள்ளது.அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக, இதுவரை 2 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதேவேளை, இன்று காலை பெய்த பலத்த மழைக் காரணமாக கொழும்பு, மருதானை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சில வீதிகள் நீரில் மூழ்கியிருந்ததாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement