சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நல்லதண்ணி - சிவனொளிபாதமலை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி காரணமாக வெள்ளிக்கிழமை (28) காலை முதல் கணிசமான எண்ணிக்கையான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு செல்கின்றனர்.
இதனால் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் காரணமாக யாத்திரிகர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டியுள்ளது.
நல்லதண்ணியில் அமைந்துள்ள நான்கு வாகன நிறுத்துமிடங்களும் யாத்திரிகர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளால் நிரம்பி வழிகின்றன.
இதன் காரணமாக நல்லதண்ணி - மஸ்கெலியா வீதியின் இருபுறமும் ஏனைய வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகரித்த யாத்திரிகர்களின் வருகை - சிவனொளிபாத மலை வீதியில் கடும் நெரிசல் சிவனொளிபாத மலைக்கு செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் நல்லதண்ணி - சிவனொளிபாதமலை வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாடசாலை விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி காரணமாக வெள்ளிக்கிழமை (28) காலை முதல் கணிசமான எண்ணிக்கையான யாத்திரிகர்கள் சிவனொளிபாத மலைக்கு செல்கின்றனர்.இதனால் ஏற்பட்ட கடும் வாகன நெரிசல் காரணமாக யாத்திரிகர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டியுள்ளது. நல்லதண்ணியில் அமைந்துள்ள நான்கு வாகன நிறுத்துமிடங்களும் யாத்திரிகர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகளால் நிரம்பி வழிகின்றன.இதன் காரணமாக நல்லதண்ணி - மஸ்கெலியா வீதியின் இருபுறமும் ஏனைய வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.