• Sep 17 2024

நாட்டில் இன்றும் பல தடவைகள் மழை பெய்யும் - 10 மாவட்டங்களுக்கு தொடரும் அபாய எச்சரிக்கை

Chithra / Jun 5th 2024, 7:47 am
image

Advertisement

 

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாலை அல்லது இரவில் நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். 

மேலும் சில மாவட்டங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கு  விடுக்கப்பட்டுள்ள  மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு   நீடிக்கப்பட்டுள்ளது.

அத்தனகலு ஓயா வடிநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை படிப்படியாக தாழ்வான பகுதிகளில் அதிகரித்து வருவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கம்பஹா, ஜாஎல, கட்டான, வத்தளை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்நிலப் பிரதேச மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

அப்பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

நாட்டில் இன்றும் பல தடவைகள் மழை பெய்யும் - 10 மாவட்டங்களுக்கு தொடரும் அபாய எச்சரிக்கை  நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மாலை அல்லது இரவில் நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். மேலும் சில மாவட்டங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை, குருநாகல், நுவரெலியா, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளுக்கு  விடுக்கப்பட்டுள்ள  மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.மேலும் அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு   நீடிக்கப்பட்டுள்ளது.அத்தனகலு ஓயா வடிநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை படிப்படியாக தாழ்வான பகுதிகளில் அதிகரித்து வருவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் கம்பஹா, ஜாஎல, கட்டான, வத்தளை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்நிலப் பிரதேச மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.அப்பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement