அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானம் ஒன்றுக்கான தண்டப்பணத்தை பிரதேச சபை அனுமதி மற்றும் காரணங்கள் இன்றி குறைத்ததால் இன்று மானிப்பாய் பிரதேச சபையின் அமர்வில் மணிக்கணக்காக அமளி துமளி ஏற்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
நவாலியில் உள்ள சூரிய மின்னுற்பத்தி திட்டம் ஒன்று தனியார் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு அது இயக்கப்பட்டு வருகிறது. அதற்கு சபையில் அனுமதி பெறப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் அவருக்கு வங்கியில் கடன் பெறவேண்டிய தேவை உள்ளதால், குறித்த சூரிய மின்னுற்பத்தி கட்டுமானத்துக்கு பிரதேச சபையின் அனுமதி தேவை ஏற்பட்டது.
இந்நிலையில் அனுமதிக்காக குறித்த நபர் பிரதேச சபையை நாடினார். இதன்போது அந்த அனுமதியை வழங்குவதற்கு தண்டப்பணமாக 11 இலட்சம் ரூபாவுக்கு மேலான தொகை பிரதேச சபைக்கு செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.
இருப்பினும் எந்தவிதமான அனுமதியும் இன்றி UDA கூட்டத்தில் அந்த தொகையானது குறைக்கப்பட்டு அண்ணளவாக 5 இலட்சத்துக்கு மேற்பட்ட தொகை தண்டமாக அறவிடப்பட்டது.
இந்நிலையில் குறித்த தொகை எந்த அடிப்படையில் குறைக்கப்பட்டது என்றும், இதன்மூலம் யார் மறைமுகமாக கையூட்டு பெற்றுள்ளார்கள் என்றும், UDA கூட்ட ஆவணம் உடனடியாக சபைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.
மேலும், இது குறித்து உள்ளக விசாரணை செய்வதாக தவிசாளர் கூறியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த உறுப்பினர்கள் விசாரணை செய்ய வெளியில் இருந்து விசாரணை குழு ஒன்று அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
கூட்டத்தின்போது இடையிடையே பல தடவைகள் உறுப்பினர்கள் UDA ஆவணத்தை கொண்டு வருமாறு கூறிய நிலையில் கூட்டத்தின் இறுதியில் அந்த ஆவணம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அதில் காரணம் எதுவும் குறிப்பிடப்படாமலேயே தண்டப்பணம் குறைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து தரப்பினரும் இருப்பதால் சபையில் இது குறித்து பேசாமல் குழுநிலை கலந்துரையாடலில் பேசலாம் என செயலாளர் சபேசன் கூறினார். அதற்கு உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்தனர்.
தண்டப்பணத்தை அனுமதியின்றி குறைத்ததால் மானிப்பாய் பிரதேச சபையில் அமளி துமளி அனுமதியின்றி அமைக்கப்பட்ட கட்டுமானம் ஒன்றுக்கான தண்டப்பணத்தை பிரதேச சபை அனுமதி மற்றும் காரணங்கள் இன்றி குறைத்ததால் இன்று மானிப்பாய் பிரதேச சபையின் அமர்வில் மணிக்கணக்காக அமளி துமளி ஏற்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,நவாலியில் உள்ள சூரிய மின்னுற்பத்தி திட்டம் ஒன்று தனியார் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு அது இயக்கப்பட்டு வருகிறது. அதற்கு சபையில் அனுமதி பெறப்படவில்லை. இவ்வாறு இருக்கையில் அவருக்கு வங்கியில் கடன் பெறவேண்டிய தேவை உள்ளதால், குறித்த சூரிய மின்னுற்பத்தி கட்டுமானத்துக்கு பிரதேச சபையின் அனுமதி தேவை ஏற்பட்டது.இந்நிலையில் அனுமதிக்காக குறித்த நபர் பிரதேச சபையை நாடினார். இதன்போது அந்த அனுமதியை வழங்குவதற்கு தண்டப்பணமாக 11 இலட்சம் ரூபாவுக்கு மேலான தொகை பிரதேச சபைக்கு செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.இருப்பினும் எந்தவிதமான அனுமதியும் இன்றி UDA கூட்டத்தில் அந்த தொகையானது குறைக்கப்பட்டு அண்ணளவாக 5 இலட்சத்துக்கு மேற்பட்ட தொகை தண்டமாக அறவிடப்பட்டது.இந்நிலையில் குறித்த தொகை எந்த அடிப்படையில் குறைக்கப்பட்டது என்றும், இதன்மூலம் யார் மறைமுகமாக கையூட்டு பெற்றுள்ளார்கள் என்றும், UDA கூட்ட ஆவணம் உடனடியாக சபைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.மேலும், இது குறித்து உள்ளக விசாரணை செய்வதாக தவிசாளர் கூறியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த உறுப்பினர்கள் விசாரணை செய்ய வெளியில் இருந்து விசாரணை குழு ஒன்று அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.கூட்டத்தின்போது இடையிடையே பல தடவைகள் உறுப்பினர்கள் UDA ஆவணத்தை கொண்டு வருமாறு கூறிய நிலையில் கூட்டத்தின் இறுதியில் அந்த ஆவணம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் அதில் காரணம் எதுவும் குறிப்பிடப்படாமலேயே தண்டப்பணம் குறைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.இந்நிலையில், அனைத்து தரப்பினரும் இருப்பதால் சபையில் இது குறித்து பேசாமல் குழுநிலை கலந்துரையாடலில் பேசலாம் என செயலாளர் சபேசன் கூறினார். அதற்கு உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்தனர்.