• Sep 20 2024

அதிகரித்துள்ள போர் பதற்றம்; இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு

Chithra / Aug 6th 2024, 11:39 am
image

Advertisement

 

போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை தேடிச் சென்ற இலங்கையர் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதன்படி தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது அவசரத் தாக்குதல்கள் ஏற்பட்டால் அவர்கள் தொடர்பு கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் வெளிநாட்டு பணியாளர்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்  நிமல் பண்டாரதெரிவிக்கையில்,

தற்போது சுமார் 11,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிவதாகவும், அவர்களில் 70 வீதமானவர்கள் தாதியர்களாக கடமையாற்றுவதாகவும் தெரிவித்தார்.

எஞ்சிய 30 வீதமானோர் விவசாயம் மற்றும் நிர்மாணத்துறையில் பணிபுரிவதாக  குறிப்பிட்டார்.

இதனிடையே, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என  இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.


அதிகரித்துள்ள போர் பதற்றம்; இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அவசர அறிவிப்பு  போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை தேடிச் சென்ற இலங்கையர் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.இதன்படி தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது அவசரத் தாக்குதல்கள் ஏற்பட்டால் அவர்கள் தொடர்பு கொள்ள இஸ்ரேலிய அதிகாரிகளின் வழிகாட்டுதல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இஸ்ரேலின் வெளிநாட்டு பணியாளர்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.இது தொடர்பில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்  நிமல் பண்டாரதெரிவிக்கையில்,தற்போது சுமார் 11,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிவதாகவும், அவர்களில் 70 வீதமானவர்கள் தாதியர்களாக கடமையாற்றுவதாகவும் தெரிவித்தார்.எஞ்சிய 30 வீதமானோர் விவசாயம் மற்றும் நிர்மாணத்துறையில் பணிபுரிவதாக  குறிப்பிட்டார்.இதனிடையே, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என  இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement