வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் முதல் மழை அதிகரிக்கும்
சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனிடையே கொழும்பு உட்பட பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர்கொழும்பு - பெரியமுல்லை வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே பிரித்தானியாவில் ஹென்க் புயலின் தாக்கம் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு இன்றையதினமும் தொடர வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஆயிரம் வீடுகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி பிரித்தானியா முழுவதும் தொடருந்து போக்குவரத்து தாமதமாகலாம் அல்லது , இரத்து செய்யப்படலாம் என அந்நாட்டின் தொடருந்து நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இதன்படி வெள்ளம் காரணமாக பிரிதானியாவின் குளோசெஸ்டர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.
ஹென்க் புயல். - நாட்டில் இன்று முதல் கன மழை. மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அத்துடன், மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.இதேவேளை மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதனிடையே கொழும்பு உட்பட பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நீர்கொழும்பு - பெரியமுல்லை வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனிடையே பிரித்தானியாவில் ஹென்க் புயலின் தாக்கம் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து பாதிப்பு இன்றையதினமும் தொடர வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அந்நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் ஆயிரம் வீடுகள் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும், வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதன்படி பிரித்தானியா முழுவதும் தொடருந்து போக்குவரத்து தாமதமாகலாம் அல்லது , இரத்து செய்யப்படலாம் என அந்நாட்டின் தொடருந்து நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.இதன்படி வெள்ளம் காரணமாக பிரிதானியாவின் குளோசெஸ்டர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டுள்ளன.