கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 20.7 கிராம் ஐஸ் மற்றும் 5 கிராம் 75 மில்லி கிராம் ஹெரோயின் என்பன கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்பு. கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பரந்தன் குமரபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 20.7 கிராம் ஐஸ் மற்றும் 5 கிராம் 75 மில்லி கிராம் ஹெரோயின் என்பன கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.அத்துடன் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நான்கு கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.