விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவர் தற்போது பல்லேகலை, தும்பர சிறைச்சாலையில் உள்ள ஒரு பாதுகாப்பான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இவ்வாறு விசேட பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஒரு நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, மறுநாள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்துவுக்கு சிறையில் விசேட பாதுகாப்பு. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர் தற்போது பல்லேகலை, தும்பர சிறைச்சாலையில் உள்ள ஒரு பாதுகாப்பான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இவ்வாறு விசேட பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஒரு நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, மறுநாள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.