ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரின் பாதுகாப்பிற்காக இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடக செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்வாறான செயற்பாடுகள் எவையும் வெறுப்புணர்வோ அல்லது பழிவாங்கும் நோக்கத்திலோ செய்யப்படவில்லை எனவும், அனைத்துக் கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் சமமாக நடத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநாவசியமாக அதிக விலை கொடுத்து மேற்கொள்ளப்படும் இந்த பாதுகாப்பு முறை நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் சமமாக நடத்துவதே தமது எதிர்பார்ப்பு-விஜித ஹேரத் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரின் பாதுகாப்பிற்காக இராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடக செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இவ்வாறான செயற்பாடுகள் எவையும் வெறுப்புணர்வோ அல்லது பழிவாங்கும் நோக்கத்திலோ செய்யப்படவில்லை எனவும், அனைத்துக் கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் சமமாக நடத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அநாவசியமாக அதிக விலை கொடுத்து மேற்கொள்ளப்படும் இந்த பாதுகாப்பு முறை நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.