• Sep 20 2024

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தி அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகளை முன்னெடுங்கள்- பிள்ளையான் வலியுறுத்து..!

Sharmi / Sep 12th 2024, 9:49 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்போது, கிழக்கு மக்களும் அதில் பங்குதாரர் ஆக வேண்டும் என இராஜாங்க  அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்றையதினம்(11) நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரின் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. 

மாகாண சபைத் தேர்தலையும் விரைவில் நடத்தி அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, யாழ்ப்பாணத்திலிருந்து சொல்வதைக் கேட்டுக்கொண்டு அழிவை நோக்கி நகர்வதா ஜனாதிபதியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் அமைச்சு ஒன்றைப் பெற்றுக்கொள்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்  எனவும் தெரிவித்தார்.


மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தி அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகளை முன்னெடுங்கள்- பிள்ளையான் வலியுறுத்து. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்போது, கிழக்கு மக்களும் அதில் பங்குதாரர் ஆக வேண்டும் என இராஜாங்க  அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்றையதினம்(11) நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்."ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரின் ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலையும் விரைவில் நடத்தி அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.எனவே, யாழ்ப்பாணத்திலிருந்து சொல்வதைக் கேட்டுக்கொண்டு அழிவை நோக்கி நகர்வதா ஜனாதிபதியுடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் அமைச்சு ஒன்றைப் பெற்றுக்கொள்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement