• Sep 24 2026

முல்லைத்தீவில் அதிகாலை பயங்கரம்! மகள் கண்முன்னே பெற்றோர் அடித்து படுகொலை!

Chithra / Sep 24th 2026, 10:51 am
image


முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்  இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.


பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் அவர்களின் மகள் ஆகிய மூவரும் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.


இதன்போது, தந்தை மற்றும் தாயின் தலையில் குறித்த நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனை அவதானித்த மகள் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து, அயலவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மாங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கொலைக்கான காரணம் மற்றும் தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் என்பது இதுவரை தெரியவராத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதனிடையே, தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


உயிரிழந்த இருவரின் சடலங்களும் தற்போது மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.


முல்லைத்தீவில் அதிகாலை பயங்கரம் மகள் கண்முன்னே பெற்றோர் அடித்து படுகொலை முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்  இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளது.பனிக்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் தந்தை, தாய் மற்றும் அவர்களின் மகள் ஆகிய மூவரும் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.இதன்போது, தந்தை மற்றும் தாயின் தலையில் குறித்த நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை அவதானித்த மகள் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து, அயலவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த இருவரையும் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மாங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கொலைக்கான காரணம் மற்றும் தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் என்பது இதுவரை தெரியவராத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதனிடையே, தடயவியல் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்த இருவரின் சடலங்களும் தற்போது மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement