களுத்துறை - மககம, திரிவானகெட்டியவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திரிவானகெட்டியவத்தை வீடொன்றில் வசித்து வந்த 76 வயதுடையய லெட்சுமி என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி இரவு 7.30 அளவில் வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொலிஸ் அவசரப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது.
சமையலறையில் வீழ்ந்து கிடந்த பெண்ணின் தலையிலிருந்து அதிகளவு இரத்தம் வெளியேறியிருந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த பெண்ணின் கணவன் உயிரிழந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அதற்காக அன்னதானம் வழங்கும் நிகழ்விற்கு வீட்டினை தயார் செய்து வந்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்று மதியம் வீட்டின் வர்ணம் பூசும் பணிகளை முடித்துவிட்டு, தொழிலாளிக்கு சம்பளம் வழங்கிய பின்னர் மூதாட்டி தேநீர் தயாரித்துக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது.
உயிரிழந்த பெண்ணின் உடல் களுத்துறை நாகொட போதனா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதன் முடிவுகளின்படி, இப்பெண்ணின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல, மாறாகத் திட்டமிட்ட தாக்குதலால் நிகழ்ந்தது என்பது உறுதியாகியுள்ளது.
பெண்ணின் முகப்பகுதியில் பாரமான ஆயுதம் ஒன்றினால் பலமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மேலும் மண்டை ஓடு மற்றும் மூளைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பலத்த காயங்களே மரணத்திற்கு முக்கிய காரணமாகும் என மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும் தலையின் பின்புறம் ஏதோ ஒரு கடினமான மேற்பரப்பில் பலமாக மோதியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்த தங்க நகைகள், 50,000 ரூபாய் பணம் என்பன திருடப்படவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மரணம் ஒரு படுகொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அகலவத்தை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் மூதாட்டிக்கு நடந்த பயங்கரம்; மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி களுத்துறை - மககம, திரிவானகெட்டியவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வயோதிப பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.திரிவானகெட்டியவத்தை வீடொன்றில் வசித்து வந்த 76 வயதுடையய லெட்சுமி என்பவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 31ஆம் திகதி இரவு 7.30 அளவில் வீடொன்றில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொலிஸ் அவசரப் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது.சமையலறையில் வீழ்ந்து கிடந்த பெண்ணின் தலையிலிருந்து அதிகளவு இரத்தம் வெளியேறியிருந்தமை கண்டறியப்பட்டது.குறித்த பெண்ணின் கணவன் உயிரிழந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அதற்காக அன்னதானம் வழங்கும் நிகழ்விற்கு வீட்டினை தயார் செய்து வந்துள்ளார்.சம்பவம் நடந்த அன்று மதியம் வீட்டின் வர்ணம் பூசும் பணிகளை முடித்துவிட்டு, தொழிலாளிக்கு சம்பளம் வழங்கிய பின்னர் மூதாட்டி தேநீர் தயாரித்துக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது.உயிரிழந்த பெண்ணின் உடல் களுத்துறை நாகொட போதனா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.அதன் முடிவுகளின்படி, இப்பெண்ணின் மரணம் விபத்தினால் ஏற்பட்டதல்ல, மாறாகத் திட்டமிட்ட தாக்குதலால் நிகழ்ந்தது என்பது உறுதியாகியுள்ளது.பெண்ணின் முகப்பகுதியில் பாரமான ஆயுதம் ஒன்றினால் பலமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது மேலும் மண்டை ஓடு மற்றும் மூளைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பலத்த காயங்களே மரணத்திற்கு முக்கிய காரணமாகும் என மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.மேலும் தலையின் பின்புறம் ஏதோ ஒரு கடினமான மேற்பரப்பில் பலமாக மோதியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.வீட்டிலிருந்த தங்க நகைகள், 50,000 ரூபாய் பணம் என்பன திருடப்படவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இந்த மரணம் ஒரு படுகொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அகலவத்தை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.