• Sep 19 2024

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகள் - அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை samugammedia

Chithra / Sep 10th 2023, 3:24 pm
image

Advertisement

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகளுக்காக 144 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட அடுக்குமாடித் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, நாரஹேன்பிட்டி, காலிங்க மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீட்டுத் தொகுதி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டுத் தொகுதியை கொழும்பு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.

இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத் தொகுதியானது சுமார் 800 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கும்.

450 சதுர அடியைக் கொண்ட  இந்த  வீடு இரண்டு படுக்கையறைகள் கொண்டது. தற்போது இந்த வீட்டின் பெறுமதி சுமார் 60 இலட்சம் ரூபா என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதி வசதிகள் - அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கை samugammedia கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதிகளுக்காக 144 வீட்டுத் தொகுதிகளைக் கொண்ட அடுக்குமாடித் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.கொழும்பு, நாரஹேன்பிட்டி, காலிங்க மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீட்டுத் தொகுதி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இந்த வீட்டுத் தொகுதியை கொழும்பு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத் தொகுதியானது சுமார் 800 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கும்.450 சதுர அடியைக் கொண்ட  இந்த  வீடு இரண்டு படுக்கையறைகள் கொண்டது. தற்போது இந்த வீட்டின் பெறுமதி சுமார் 60 இலட்சம் ரூபா என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement