• Apr 03 2025

இலங்கை தமிழ் ஏதிலிகளுக்காக தமிழகத்தில் வீடுகள் திறந்து வைப்பு!

Chithra / Feb 7th 2024, 12:25 pm
image

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள ஏதிலிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை - தேக்காட்டூர் பகுதியில் புதிதாக 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் நேற்று அவற்றை திறந்து வைத்துள்ளனர்.

3.56 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் எட்டயபுரம் - குளத்துள்வாய்பட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 40 வீடுகளும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

2.03 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், சிவகாசி - ஆனைக்குட்டம் பகுதியிலும் இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழ் ஏதிலிகளுக்காக தமிழகத்தில் வீடுகள் திறந்து வைப்பு தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் உள்ள ஏதிலிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை - தேக்காட்டூர் பகுதியில் புதிதாக 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் நேற்று அவற்றை திறந்து வைத்துள்ளனர்.3.56 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.அதேநேரம் எட்டயபுரம் - குளத்துள்வாய்பட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 40 வீடுகளும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.2.03 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.அதேநேரம், சிவகாசி - ஆனைக்குட்டம் பகுதியிலும் இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement