• Sep 19 2024

வடக்கு மக்களுக்கு சீன நிதியுதவின் கீழ் வீடுகள்..! வவுனியாவில் சீனத் தூதுவர் அறிவிப்பு..! samugammedia

Chithra / Nov 5th 2023, 4:37 pm
image

Advertisement

 

வடமாகாண மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று பயணித்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் அதற்கு தீர்வு காணும் வகையில் சீனா அரசாங்கம் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அதற்காக செயற்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சீனா தொடர்தும் உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்த அவர் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற சீனா அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சீனா அரசாங்கம் 155 மில்லியன் ரூபாயை வடக்கு மாகாணததிற்கு ஒதுக்கியுள்ளது என்றும் அதில் நிவாரணப் பொதிகள் வழங்குவது மட்டுமன்றி மீன்பிடி வலைகள் பெறுவதற்கும் பயன்படுத்துவதாகவும் மிகுதிப் பணத்தில் வடமாகாணத்தில் வீடு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சீன அரசாங்கத்தின் வவுனியா மாவட்டத்திற்கான நிவாரண உதவித் திட்டத்தை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.

வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா தெற்கு உள்ளடங்களாக 4 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 500 குடும்பங்களுக்கு சீனாவால் 7500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டது.

சீன பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த மக்களால் வழங்கப்படும் குறித்த உலர் உணவுப் பொருட்களை சீனா – இலங்கை பௌத்த நட்புறவுத் திட்டத்தின் கீழ் சீன தூதுவர் உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்தார்.


வடக்கு மக்களுக்கு சீன நிதியுதவின் கீழ் வீடுகள். வவுனியாவில் சீனத் தூதுவர் அறிவிப்பு. samugammedia  வடமாகாண மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.வவுனியா மாவட்ட செயலகத்திற்கு இன்று பயணித்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் உள்ள மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் அதற்கு தீர்வு காணும் வகையில் சீனா அரசாங்கம் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அதற்காக செயற்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சீனா தொடர்தும் உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்த அவர் இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற சீனா அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.அத்துடன் சீனா அரசாங்கம் 155 மில்லியன் ரூபாயை வடக்கு மாகாணததிற்கு ஒதுக்கியுள்ளது என்றும் அதில் நிவாரணப் பொதிகள் வழங்குவது மட்டுமன்றி மீன்பிடி வலைகள் பெறுவதற்கும் பயன்படுத்துவதாகவும் மிகுதிப் பணத்தில் வடமாகாணத்தில் வீடு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் மேலும் தெரிவித்துள்ளார்.இதன்போது சீனத் தூதுவர் கீ சென்ஹொங் சீன அரசாங்கத்தின் வவுனியா மாவட்டத்திற்கான நிவாரண உதவித் திட்டத்தை வழங்கி ஆரம்பித்து வைத்தார்.வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா தெற்கு உள்ளடங்களாக 4 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 500 குடும்பங்களுக்கு சீனாவால் 7500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் முதல் கட்டமாக வழங்கப்பட்டது.சீன பௌத்த விகாரைகள் மற்றும் பௌத்த மக்களால் வழங்கப்படும் குறித்த உலர் உணவுப் பொருட்களை சீனா – இலங்கை பௌத்த நட்புறவுத் திட்டத்தின் கீழ் சீன தூதுவர் உத்தியோக பூர்வமாக வழங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

Advertisement