• Oct 07 2024

திருமலையில் 2024 ஆண்டுக்கான குடிசன தொகை மதிப்பீடு இன்று ஆரம்பம்..!

Sharmi / Oct 7th 2024, 9:32 am
image

Advertisement

திருகோணமலை மாவட்டத்தில், 2024 ஆண்டுக்கான குடிசன தொகை மதிப்பீடு மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டிராச்சியினால் இன்று(7)காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, மாலின்துறை கிராம சேவகர் பிரிவில், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். எம். கனியின் மேற்பார்வையின் கீழ், இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குடிசனத் தொகை மதிப்பு என்பது, தேசியக் கொள்கைகளை தயாரிப்பிற்கும், நாட்டுக்கான அபிவிருத்தி திட்டங்களை வகுப்பதற்கும் அவசியமானவை என்றும், அதன் புவியியல் ரீதியான பரம்பல், இனப் பரவல் மற்றும் மக்கள் தொகை, அவற்றில் உள்ள பல்வேறு சமூக பண்புகள் அரச - மக்கள் தொடர்புகளுக்கு முக்கியமானது என்றும் இந்த மாவட்டத்துக்கான மக்கள் கணக்கெடுப்பு கிண்ணியாவில் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இதற்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர்  இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது தெரிவித்தார்.

கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களாக கிராம சேவகர்கள் மற்றும் அதற்காக பயிற்றப்பட்ட அரச ஊழியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.

இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட குடிசன மதிப்பீட்டு உத்தியோகத்தர் எச். பி. ஐ. ஹேரத் மற்றும் இலங்கை தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்கள பிரதி பணிப்பாளர்(ICT) சதாசிவம் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.

இலங்கையின் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருவதோடு 2012 ஆம் ஆண்டு இறுதிக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய குடிசன மதிப்பீடு, நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று  காரணமாக கைவிடப்பட்டது.

இந்த வருடம் கணக்கெடுப்பு நடாத்தப்படாவிட்டால், ஐக்கிய நாடுகள் சபையின் உலக குடிசன மதிப்பீட்டு பட்டியலில் இருந்து, இலங்கை நீக்கப்படக்கூடிய சூழல் ஒன்று இருப்பதன் காரணமாகவே தேர்தல் காலங்கள் என்று கூட பார்க்காமல், குறித்த நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கையில் சட்ட ரீதியாக முதலாவது குடிசன கணக்கெடுப்பு 1871 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இது தெற்காசிய நாடுகளில் நடத்தப்பட்ட முதலாவது விஞ்ஞானபூர்வமான கணக்கெடுப்பாகும்.

சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிவிப்பின் படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2012 மார்ச் மாத கணக்கெடுப்பின்படி 2 கோடியே 40  இலட்சமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


திருமலையில் 2024 ஆண்டுக்கான குடிசன தொகை மதிப்பீடு இன்று ஆரம்பம். திருகோணமலை மாவட்டத்தில், 2024 ஆண்டுக்கான குடிசன தொகை மதிப்பீடு மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டிராச்சியினால் இன்று(7)காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, மாலின்துறை கிராம சேவகர் பிரிவில், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். எம். கனியின் மேற்பார்வையின் கீழ், இந்த நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.குடிசனத் தொகை மதிப்பு என்பது, தேசியக் கொள்கைகளை தயாரிப்பிற்கும், நாட்டுக்கான அபிவிருத்தி திட்டங்களை வகுப்பதற்கும் அவசியமானவை என்றும், அதன் புவியியல் ரீதியான பரம்பல், இனப் பரவல் மற்றும் மக்கள் தொகை, அவற்றில் உள்ள பல்வேறு சமூக பண்புகள் அரச - மக்கள் தொடர்புகளுக்கு முக்கியமானது என்றும் இந்த மாவட்டத்துக்கான மக்கள் கணக்கெடுப்பு கிண்ணியாவில் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது. இதற்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர்  இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது தெரிவித்தார்.கணக்கெடுப்பு உத்தியோகத்தர்களாக கிராம சேவகர்கள் மற்றும் அதற்காக பயிற்றப்பட்ட அரச ஊழியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டனர்.இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட குடிசன மதிப்பீட்டு உத்தியோகத்தர் எச். பி. ஐ. ஹேரத் மற்றும் இலங்கை தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்கள பிரதி பணிப்பாளர்(ICT) சதாசிவம் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.இது இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.இலங்கையின் சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருவதோடு 2012 ஆம் ஆண்டு இறுதிக் கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது.இதன்படி, 2022 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய குடிசன மதிப்பீடு, நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று  காரணமாக கைவிடப்பட்டது.இந்த வருடம் கணக்கெடுப்பு நடாத்தப்படாவிட்டால், ஐக்கிய நாடுகள் சபையின் உலக குடிசன மதிப்பீட்டு பட்டியலில் இருந்து, இலங்கை நீக்கப்படக்கூடிய சூழல் ஒன்று இருப்பதன் காரணமாகவே தேர்தல் காலங்கள் என்று கூட பார்க்காமல், குறித்த நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகின்றது.இலங்கையில் சட்ட ரீதியாக முதலாவது குடிசன கணக்கெடுப்பு 1871 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. இது தெற்காசிய நாடுகளில் நடத்தப்பட்ட முதலாவது விஞ்ஞானபூர்வமான கணக்கெடுப்பாகும்.சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிவிப்பின் படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2012 மார்ச் மாத கணக்கெடுப்பின்படி 2 கோடியே 40  இலட்சமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement