• Nov 10 2024

நாட்டைக் கொளுத்தியவர்களால் நாட்டை எவ்வாறு மீட்க முடியும்? - சஜித் கேள்வி

Chithra / Sep 8th 2024, 3:34 pm
image


"ரணில் விக்கிரமசிங்கமும், அநுரகுமார திஸாநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். நாட்டைத் தீயிட்டுக் கொளுத்துகின்றவர்களுக்கு, கொலைகளைச் செய்கின்றவர்களுக்கு இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. ரணிலுக்கும் அநுரவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்து நாட்டுக்குச் சேவை செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது."

- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஹோமாகம நகரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ரணில், அநுர இருவருக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இல்லை. இவர்களில் ஒருவருக்கு மக்களின் இதயத்துடிப்பு தெரிவதில்லை. 220 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு ஆசை, துன்பம், வேதனை, என்பவற்றையும் அறிவதில்லை. 

இவர்களில் மற்றவர் அனைத்தையும் சீரழிக்கின்ற - எரியூட்டுகின்ற சமூகப் படுகொலைகளை முன்னிலைப்படுத்திச் செயற்படுகின்றவர். 

200 ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற பணி முன்னெடுக்கப்பட்டபோது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரேமதாஸ உருவாக்கும் ஆடை தொழிற்சாலைகளைத் தீயிட்டு கொளுத்துவதாக எச்சரிக்கை விடுத்தவர்.

பாரிய அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், மக்களின் வாழ்க்கை நிலை மோசமடைந்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சுத்தமான ஆட்சி ஒன்றின் ஊடாக 220 இலட்சம் மக்களுக்கும் பொறுப்புக் கூறுகின்ற முறையிலான பொதுமக்களை மையமாகக் கொண்ட அரசாட்சி முறையொன்றை இந்த நாட்டுக்குள் கட்டியெழுப்புவோம்." - என்றார்.

நாட்டைக் கொளுத்தியவர்களால் நாட்டை எவ்வாறு மீட்க முடியும் - சஜித் கேள்வி "ரணில் விக்கிரமசிங்கமும், அநுரகுமார திஸாநாயக்கவும் புதிய அரசியல் திருமண விருந்து உண்ணுகின்றார்கள். நாட்டைத் தீயிட்டுக் கொளுத்துகின்றவர்களுக்கு, கொலைகளைச் செய்கின்றவர்களுக்கு இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. ரணிலுக்கும் அநுரவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்து நாட்டுக்குச் சேவை செய்யும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது."- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.ஹோமாகம நகரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,"ரணில், அநுர இருவருக்கும் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இல்லை. இவர்களில் ஒருவருக்கு மக்களின் இதயத்துடிப்பு தெரிவதில்லை. 220 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பு ஆசை, துன்பம், வேதனை, என்பவற்றையும் அறிவதில்லை. இவர்களில் மற்றவர் அனைத்தையும் சீரழிக்கின்ற - எரியூட்டுகின்ற சமூகப் படுகொலைகளை முன்னிலைப்படுத்திச் செயற்படுகின்றவர். 200 ஆடைத் தொழிற்சாலைகளை உருவாக்குகின்ற பணி முன்னெடுக்கப்பட்டபோது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரேமதாஸ உருவாக்கும் ஆடை தொழிற்சாலைகளைத் தீயிட்டு கொளுத்துவதாக எச்சரிக்கை விடுத்தவர்.பாரிய அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில், மக்களின் வாழ்க்கை நிலை மோசமடைந்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சுத்தமான ஆட்சி ஒன்றின் ஊடாக 220 இலட்சம் மக்களுக்கும் பொறுப்புக் கூறுகின்ற முறையிலான பொதுமக்களை மையமாகக் கொண்ட அரசாட்சி முறையொன்றை இந்த நாட்டுக்குள் கட்டியெழுப்புவோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement