• Nov 21 2025

சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்தாமல் எப்படி கடல்தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும், நா.வர்ணகுலசிங்கம் கேள்வி?

dorin / Nov 18th 2025, 9:32 pm
image

2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி கடற்றொழிலை அபிவிருத்தி செய்யப்போவதாக அறிவித்தருந்தார். 

ஆனால் சட்டவிரோத கடற்றொழில் மற்றும் இந்திய இழுவை மடி படகு தொழில்களை கட்டுப்டுத்தாமல் எப்படி கடல்வளத்தை அபிவிருத்தி செய்யமுடியும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமரசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் தனது இல்லத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது

தற்போதும் அதிகளவான இந்திய இழுவைப்படகுகள் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வந்து செல்வதாகவும்இ உள்ளூர் இழுவை மடி படகுகளும் சட்டவிரோத இழுவைமடி படகுகளும் சட்டவிரோத தொழில்கள் மேற்கொண்டு வருவதனால் மீன் உற்பத்தி பெருகுமிடங்கள் அழிந்து வருவதாகவும்

மீன் பெருக்கமும் இல்லாது வருவதாகவும் இதனால் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் குறிப்பிட்டது போன்று மீன் இல்லாத கடலை எப்படி அபிவிருத்தி செய்யமுடியும் என்றும் சொப்பிங் பைகள் தற்போது காசுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்,

இதனால் வர்த்தகர்கள் தான் நன்மை அடவதாகவும் சுட்டிக்காட்டிய வர்ணகுலசிங்கம் 

சொப்பிங் பைகள் மற்றும் பிளாஸ்ரிக் உற்பத்தி செய்வோரை கட்டுப்படுத்தாது அப்பாவி மக்களை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளதுடன் அதிகளவான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் கடற்கரை ஓரங்களில் ஒதுங்குவதாகவும் தெரிவித்தார். 

மேலும் வடக்கு கரையோரங்களில் கண்ணிற்கெட்டிய தூரம்வரை எல்லை தாண்டிய இழுவைமடி படகுகள் வந்து செல்வதாகவும், அது தொடர்பாக அவரால் பதிவு செய்யப்பட்ட காணொளிகளையும்இ இந்திய இழுவைமடி படகுகளால் அறுத்தெறியப்பட்ட உள்ளூர் மீனவர்களின் வலைகளின் காணொளிகளையும் காண்பித்ததுடன் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் வாய் வார்த்தைகளில் கூறுவதை விடுத்து கடற்றொழிலை அபிவிருத்தி செய்ய பாடுபடவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்தாமல் எப்படி கடல்தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும், நா.வர்ணகுலசிங்கம் கேள்வி 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி கடற்றொழிலை அபிவிருத்தி செய்யப்போவதாக அறிவித்தருந்தார். ஆனால் சட்டவிரோத கடற்றொழில் மற்றும் இந்திய இழுவை மடி படகு தொழில்களை கட்டுப்டுத்தாமல் எப்படி கடல்வளத்தை அபிவிருத்தி செய்யமுடியும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமரசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.அவர் தனது இல்லத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவதுதற்போதும் அதிகளவான இந்திய இழுவைப்படகுகள் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை வந்து செல்வதாகவும்இ உள்ளூர் இழுவை மடி படகுகளும் சட்டவிரோத இழுவைமடி படகுகளும் சட்டவிரோத தொழில்கள் மேற்கொண்டு வருவதனால் மீன் உற்பத்தி பெருகுமிடங்கள் அழிந்து வருவதாகவும்மீன் பெருக்கமும் இல்லாது வருவதாகவும் இதனால் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் குறிப்பிட்டது போன்று மீன் இல்லாத கடலை எப்படி அபிவிருத்தி செய்யமுடியும் என்றும் சொப்பிங் பைகள் தற்போது காசுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்,இதனால் வர்த்தகர்கள் தான் நன்மை அடவதாகவும் சுட்டிக்காட்டிய வர்ணகுலசிங்கம் சொப்பிங் பைகள் மற்றும் பிளாஸ்ரிக் உற்பத்தி செய்வோரை கட்டுப்படுத்தாது அப்பாவி மக்களை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளதுடன் அதிகளவான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் கடற்கரை ஓரங்களில் ஒதுங்குவதாகவும் தெரிவித்தார். மேலும் வடக்கு கரையோரங்களில் கண்ணிற்கெட்டிய தூரம்வரை எல்லை தாண்டிய இழுவைமடி படகுகள் வந்து செல்வதாகவும், அது தொடர்பாக அவரால் பதிவு செய்யப்பட்ட காணொளிகளையும்இ இந்திய இழுவைமடி படகுகளால் அறுத்தெறியப்பட்ட உள்ளூர் மீனவர்களின் வலைகளின் காணொளிகளையும் காண்பித்ததுடன் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சர் ஆகியோர் வாய் வார்த்தைகளில் கூறுவதை விடுத்து கடற்றொழிலை அபிவிருத்தி செய்ய பாடுபடவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement