புத்தளம் - கற்பிட்டி, குடாவ களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (28) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் சத்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி படகுகள் மற்றும் ஒரு தெப்பம் என்பனவற்றை கடற்படையினர் சோதனை செய்த போதே இந்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
எனினும், சந்தேகத்தின் பெயரில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
இதன்போது குறித்த 33 உர மூடைகளிலும் 1042 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 1042 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 33 உரமூடைகளுடன், இரண்டு டிங்கி இயந்திர படகுகளும், ஒரு தெப்பமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு புத்தளம் - கற்பிட்டி, குடாவ களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்று (28) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த பகுதியில் சத்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டிங்கி படகுகள் மற்றும் ஒரு தெப்பம் என்பனவற்றை கடற்படையினர் சோதனை செய்த போதே இந்த பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.எனினும், சந்தேகத்தின் பெயரில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.இதன்போது குறித்த 33 உர மூடைகளிலும் 1042 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 1042 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 33 உரமூடைகளுடன், இரண்டு டிங்கி இயந்திர படகுகளும், ஒரு தெப்பமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.