• Nov 22 2024

மாம்பழ உற்பத்தியால் அரசாங்கத்திற்கு கிடைத்த பெரும் இலாபம்..!

Chithra / Jan 16th 2024, 8:28 am
image

 

கடந்த வருடத்தில் மாம்பழ உற்பத்தி பாரியளவில் அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் வரட்சியான காலநிலையை தொடர்ந்து பெய்த மழை காரணமாகவே மாம்பழ அறுவடை அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், கடந்த வாரம் விவசாயம் குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடலின் போது, மா செய்கையினை மேலும் அதிகரிப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது மா செய்கையை நடளாவிய ரீதியாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதேவேளை, மாம்பழ ஏற்றுமதியினை மேலும் விஸ்தரிப்பது குறித்தும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக வருடாந்த உற்பத்தி 25 கோடி என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் தற்போது அந்த எண்ணிக்கையினை விட கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முன்னர் TEJC ரக மாம்பழங்கள் கிலோ ஒன்றின் விலை 800 ரூபாய் முதல் 1,000 ரூபாவாக சந்தையில் விற்கப்பட்டது.

ஆனால், தற்போது உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக 400 முதல் 500 ரூபாய் வரை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாம்பழ உற்பத்தியால் அரசாங்கத்திற்கு கிடைத்த பெரும் இலாபம்.  கடந்த வருடத்தில் மாம்பழ உற்பத்தி பாரியளவில் அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த வருடத்தில் வரட்சியான காலநிலையை தொடர்ந்து பெய்த மழை காரணமாகவே மாம்பழ அறுவடை அதிகரித்துள்ளது.இந்தநிலையில், கடந்த வாரம் விவசாயம் குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடலின் போது, மா செய்கையினை மேலும் அதிகரிப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது மா செய்கையை நடளாவிய ரீதியாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.அதேவேளை, மாம்பழ ஏற்றுமதியினை மேலும் விஸ்தரிப்பது குறித்தும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியாக வருடாந்த உற்பத்தி 25 கோடி என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும் தற்போது அந்த எண்ணிக்கையினை விட கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக முன்னர் TEJC ரக மாம்பழங்கள் கிலோ ஒன்றின் விலை 800 ரூபாய் முதல் 1,000 ரூபாவாக சந்தையில் விற்கப்பட்டது.ஆனால், தற்போது உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக 400 முதல் 500 ரூபாய் வரை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement