• May 21 2024

சட்டவிரோதமான முறையில் வற் வரி அறவிடும் வர்த்தக நிலையங்கள்..! பொதுமக்கள் முறையிடலாம்!

VAT
Chithra / Jan 16th 2024, 8:29 am
image

Advertisement


உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல், சில வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நுகர்வோரிடமிருந்து 18 சதவீதம் வரை வற் வரியை சட்டவிரோதமான முறையில் அறவிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில், பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பற்றுச்சீட்டுக்களில் வற் வரிக்கான பதிவு இலக்கத்தை குறிப்பிடாது, வற் வரி அறவிடப்பட்டால் அது தொடர்பில் நுகர்வோர் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய முறைப்பாடுகளை உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்து மூலமாகவோ அல்லது cgir@ird.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ அனுப்ப முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


சட்டவிரோதமான முறையில் வற் வரி அறவிடும் வர்த்தக நிலையங்கள். பொதுமக்கள் முறையிடலாம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யாமல், சில வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நுகர்வோரிடமிருந்து 18 சதவீதம் வரை வற் வரியை சட்டவிரோதமான முறையில் அறவிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில், பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.பற்றுச்சீட்டுக்களில் வற் வரிக்கான பதிவு இலக்கத்தை குறிப்பிடாது, வற் வரி அறவிடப்பட்டால் அது தொடர்பில் நுகர்வோர் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்தகைய முறைப்பாடுகளை உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்து மூலமாகவோ அல்லது cgir@ird.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ அனுப்ப முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement