• Sep 20 2024

நீர்கொழும்பில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு!

Tamil nila / Sep 8th 2024, 7:37 pm
image

Advertisement

புத்தளம் கற்பிட்டி மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்றும் (07), இன்றும் (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கு கடற்படை கட்டளையின் ரங்கல கடற்படையினர் நீர்கொழும்பு களப்பு பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றரை சோதனை செய்தனர்.

இதன் போது, குறித்த டிங்கி இயந்திர படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 6 உரமூடைகளை கைப்பற்றிய கடற்படையினர் அதனை சோதனை செய்தனர்.

இதன் போது குறித்த 6 உர மூடைகளில் இருந்து 150 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் கற்பிட்டி - அல்மனார் பகுதியில் விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை கடற்படையினரும், பொலிஸாரும் சோதனையிட்டனர்.

லொறியில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த லொறியில் 6 உரமூடைகளில் இருந்து 185 கிலோ கிராம் பீடி இலைகள் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

சேரக்குளி கடல் பிரதேசத்தில் நீரில் மிதந்துகொண்டிருந்த 6 உரமூடைகளை விஜய நிறுவனத்தின் கடற்படையினர் பரிசோதனை செய்துள்ளனர்.

குறித்த 6 உரமூடைகளில் இருந்து 198 கிலோ கிராம் பீடி இலைகள் காணப்பட்டுள்ளன.

சின்ன அரச்சி தீவுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றரை கடற்படையினர் பரிசோதனை செய்தனர்.

16 உரமூடைகளில் அடைக்கப்பட்டிருந்த 548 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து 40 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 1081 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 1081 கிலோ பீடி இலைகள் மற்றும் இரண்டு டிங்கி இயந்திர படகுகள், லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடமும், வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடமும் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


நீர்கொழும்பில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு புத்தளம் கற்பிட்டி மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் நேற்றும் (07), இன்றும் (08) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.மேற்கு கடற்படை கட்டளையின் ரங்கல கடற்படையினர் நீர்கொழும்பு களப்பு பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றரை சோதனை செய்தனர்.இதன் போது, குறித்த டிங்கி இயந்திர படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 6 உரமூடைகளை கைப்பற்றிய கடற்படையினர் அதனை சோதனை செய்தனர்.இதன் போது குறித்த 6 உர மூடைகளில் இருந்து 150 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் கற்பிட்டி - அல்மனார் பகுதியில் விஷேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றை கடற்படையினரும், பொலிஸாரும் சோதனையிட்டனர்.லொறியில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.குறித்த லொறியில் 6 உரமூடைகளில் இருந்து 185 கிலோ கிராம் பீடி இலைகள் காணப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.சேரக்குளி கடல் பிரதேசத்தில் நீரில் மிதந்துகொண்டிருந்த 6 உரமூடைகளை விஜய நிறுவனத்தின் கடற்படையினர் பரிசோதனை செய்துள்ளனர்.குறித்த 6 உரமூடைகளில் இருந்து 198 கிலோ கிராம் பீடி இலைகள் காணப்பட்டுள்ளன.சின்ன அரச்சி தீவுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி இயந்திர படகு ஒன்றரை கடற்படையினர் பரிசோதனை செய்தனர்.16 உரமூடைகளில் அடைக்கப்பட்டிருந்த 548 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.கற்பிட்டி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து 40 உரமூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 1081 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 1081 கிலோ பீடி இலைகள் மற்றும் இரண்டு டிங்கி இயந்திர படகுகள், லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடமும், வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடமும் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement