• May 16 2026

சிறுபான்மை மக்களின் மனித உரிமைகள் கருத்தமர்வு !

Ziya / Dec 20th 2025, 5:07 pm
image

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, ண்டனில் உள்ள இல்ஃபோர்டில்  தமிழ் தகவல் மையத்தால் கருத்தமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட உலக மனித உரிமைகள் தினத்தை அங்கீகரிப்பதற்கும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களாலும், உலகெங்கிலும்உள்ள பிற இன மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களாலும் தொடர்ந்து அனுபவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிஞர்கள் மற்றும்பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை வலுப்படுத்தி, அடிப்படை மனித உரிமைகள் மீதான தொடர்ச்சியான சர்வதேச ஆய்வை ஊக்குவிப்பதன் மூலம் பரந்த மனித உரிமைகள் விவாதத்திற்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டு இந் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் தினத்தின் 77வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், தமிழ் தகவல் மையம் (TIC) லண்டனில் உள்ள பஞ்சாபி மையத்தில் மேற்படி நிகழ்வை நடாத்தியது.

இந்த நிகழ்வில் பொதுச் சட்டம், மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேசச்சட்டம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் சாந்திசிவகுமாரன் மற்றும் பொது நலச் சட்ட மையத்தின் (PILC) நிறுவனர் பால்ஹெரான் ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் தகவல் மையத்தின் (TIC)மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டது.

அத்தோடு கொல்லப்பட்ட ஊடகவியலாளர் "மாமனிதர்" தாரகி சிவராமுக்கு பத்திரிகைத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக,வரதகுமார் நினைவு விருதும் வழங்கப்பட்டது

சிறுபான்மை மக்களின் மனித உரிமைகள் கருத்தமர்வு உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, ண்டனில் உள்ள இல்ஃபோர்டில்  தமிழ் தகவல் மையத்தால் கருத்தமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட உலக மனித உரிமைகள் தினத்தை அங்கீகரிப்பதற்கும், இலங்கையில் உள்ள தமிழ் மக்களாலும், உலகெங்கிலும்உள்ள பிற இன மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களாலும் தொடர்ந்து அனுபவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து அறிஞர்கள் மற்றும்பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை வலுப்படுத்தி, அடிப்படை மனித உரிமைகள் மீதான தொடர்ச்சியான சர்வதேச ஆய்வை ஊக்குவிப்பதன் மூலம் பரந்த மனித உரிமைகள் விவாதத்திற்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டு இந் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.மனித உரிமைகள் தினத்தின் 77வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், தமிழ் தகவல் மையம் (TIC) லண்டனில் உள்ள பஞ்சாபி மையத்தில் மேற்படி நிகழ்வை நடாத்தியது.இந்த நிகழ்வில் பொதுச் சட்டம், மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேசச்சட்டம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் சாந்திசிவகுமாரன் மற்றும் பொது நலச் சட்ட மையத்தின் (PILC) நிறுவனர் பால்ஹெரான் ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான தமிழ் தகவல் மையத்தின் (TIC)மனித உரிமைகள் விருது வழங்கப்பட்டது.அத்தோடு கொல்லப்பட்ட ஊடகவியலாளர் "மாமனிதர்" தாரகி சிவராமுக்கு பத்திரிகைத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக,வரதகுமார் நினைவு விருதும் வழங்கப்பட்டது

Advertisement

Advertisement

Advertisement