• Sep 17 2024

தமிழ் மக்களிடம் பொய்களைக் கூறி வாக்கு வேட்டை- தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டிக் கோரிக்கையை உள்ளடக்க அனுர தயாரா? சபா.குகதாஸ் சவால்

Sharmi / Aug 16th 2024, 3:26 pm
image

Advertisement

தமிழ் மக்களுக்கு பொய்  வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில்  சமஷ்டிக் கோரிக்கையை உள்ளடக்க முடியுமா என ரெலோ அமைப்பின்  முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ்,  மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு சவால் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில்  உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம்(15)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடுகின்ற நிலையில் அவரது யாழ் மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ் மக்களிடம் பொய்களைக் கூறி வாக்கு கேட்க ஆரம்பித்து விட்டார். 

தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுடன் சென்று பணப்பட்டி பெற்றதாகவும் பொது வேட்பாளர் விடயம் நம்பிக்கையாற்றுப் போனதாகவும் கருத்து தெரிவித்திருந்தார். 

நாம் தமிழ் மக்களின் பொது வேட்பாளரை ஆதரித்துள்ளோம் அது தொடர்பில் மக்களிடம் தெளிவாகவே கூறியுள்ளோம். 

எமது பொது வேட்பாளர் தொடர்பில் பேசுவதற்கு தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் அழைப்பு விடுத்த தன் பின்னனியில் ஏற்றுப் பேசச் சென்றோம்.

விரும்பியோ விரும்பாமலோ தென் இலங்கை பெரும்பான்மை கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அவ்வாறு  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருடன்  தமிழ் மக்களின் கோரிக்கைகளை பேசுவதற்கான  முன் ஏற்பாடாகவே எமது பொது வேட்பாளரின் கோரிக்கை தொடர்பில் அழைப்பு விடுத்த கட்சிகளுடன் சென்று பேசினோம். 

 பணப்பெட்டியை பெறுவதற்காக அவர்களிடம் பேசுவதற்கு செல்லவில்லை. இனியும் யார் அழைத்தாலும் பேசுவதற்கு செல்வோம். 

ஏனெனில் இப்போது நாம் பேச மறுத்தால் ஆட்சி பீடத்தில் ஏறிய பின்னர் தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை பேசுவதற்கு அழைக்க மாட்டார்கள். இது கடந்த காலத்திலும் இடம்பெற்றது. 

 ஜே.வி.பி கடந்த காலங்களில் சிங்கள பெரும்பான்மை கட்சிகளுக்குப் பின்னால் நின்று தமிழ் மக்களை அழித்த வரலாற்றை தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 

தமிழ் மக்களின் பூர்வீக தாயகமான வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை சிங்கள பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து கூறியது ஜே.வி.பி தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 

நான் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான அனுராவிடம் பகிரங்கமாக ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். 

உங்கள்  ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி கோரிக்கையை உங்கள் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியுமா? 

நீங்கள் அவ்வாறு உள்ளடக்க முடியுமானால், நீங்கள் தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கும் வாக்கு கேட்பதற்கும் அருகதை உள்ளவர்களாக கருத முடியும். 

ஆகவே தமிழ் மக்கள் தொடர்பிலும் தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கும் கட்சிகளையும் தேர்தல் காலங்களில் தேவையற்ற விமர்சனங்களை கூறுவதிலும் பார்க்க நீங்கள் தமிழ் மக்கள் சார்ந்து எங்கள் கோரிக்கையை முன் வையுங்கள் பார்க்கலாம் உங்களுக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது என நாங்கள் சிந்திப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். 

தமிழ் மக்களிடம் பொய்களைக் கூறி வாக்கு வேட்டை- தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டிக் கோரிக்கையை உள்ளடக்க அனுர தயாரா சபா.குகதாஸ் சவால் தமிழ் மக்களுக்கு பொய்  வாக்குறுதிகளை வழங்குவதை விடுத்து தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில்  சமஷ்டிக் கோரிக்கையை உள்ளடக்க முடியுமா என ரெலோ அமைப்பின்  முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ்,  மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு சவால் விடுத்துள்ளார்.யாழ்ப்பாணத்தில்  உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம்(15)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடுகின்ற நிலையில் அவரது யாழ் மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ் மக்களிடம் பொய்களைக் கூறி வாக்கு கேட்க ஆரம்பித்து விட்டார். தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுடன் சென்று பணப்பட்டி பெற்றதாகவும் பொது வேட்பாளர் விடயம் நம்பிக்கையாற்றுப் போனதாகவும் கருத்து தெரிவித்திருந்தார். நாம் தமிழ் மக்களின் பொது வேட்பாளரை ஆதரித்துள்ளோம் அது தொடர்பில் மக்களிடம் தெளிவாகவே கூறியுள்ளோம். எமது பொது வேட்பாளர் தொடர்பில் பேசுவதற்கு தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் அழைப்பு விடுத்த தன் பின்னனியில் ஏற்றுப் பேசச் சென்றோம்.விரும்பியோ விரும்பாமலோ தென் இலங்கை பெரும்பான்மை கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.அவ்வாறு  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவருடன்  தமிழ் மக்களின் கோரிக்கைகளை பேசுவதற்கான  முன் ஏற்பாடாகவே எமது பொது வேட்பாளரின் கோரிக்கை தொடர்பில் அழைப்பு விடுத்த கட்சிகளுடன் சென்று பேசினோம்.  பணப்பெட்டியை பெறுவதற்காக அவர்களிடம் பேசுவதற்கு செல்லவில்லை. இனியும் யார் அழைத்தாலும் பேசுவதற்கு செல்வோம். ஏனெனில் இப்போது நாம் பேச மறுத்தால் ஆட்சி பீடத்தில் ஏறிய பின்னர் தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை பேசுவதற்கு அழைக்க மாட்டார்கள். இது கடந்த காலத்திலும் இடம்பெற்றது.  ஜே.வி.பி கடந்த காலங்களில் சிங்கள பெரும்பான்மை கட்சிகளுக்குப் பின்னால் நின்று தமிழ் மக்களை அழித்த வரலாற்றை தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தமிழ் மக்களின் பூர்வீக தாயகமான வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை சிங்கள பெரும்பான்மை கட்சிகளுடன் இணைந்து கூறியது ஜே.வி.பி தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நான் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளருமான அனுராவிடம் பகிரங்கமாக ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். உங்கள்  ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி கோரிக்கையை உங்கள் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியுமா நீங்கள் அவ்வாறு உள்ளடக்க முடியுமானால், நீங்கள் தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கும் வாக்கு கேட்பதற்கும் அருகதை உள்ளவர்களாக கருத முடியும். ஆகவே தமிழ் மக்கள் தொடர்பிலும் தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கும் கட்சிகளையும் தேர்தல் காலங்களில் தேவையற்ற விமர்சனங்களை கூறுவதிலும் பார்க்க நீங்கள் தமிழ் மக்கள் சார்ந்து எங்கள் கோரிக்கையை முன் வையுங்கள் பார்க்கலாம் உங்களுக்கு எவ்வாறு ஆதரவு வழங்குவது என நாங்கள் சிந்திப்போம் என அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement