• Oct 11 2024

விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம்

Sharmi / Aug 16th 2024, 3:32 pm
image

Advertisement

வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று(16) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்றையதினம் இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை நீண்ட நேரமாகியும் காணாமையினால் அவரது தந்தை தேடியுள்ளார். 

இதன்போது காணியின் பின்புறத்தில் குறித்த இளைஞர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். 

அவர் வீட்டின் பின்புறத்தில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட மின்சாரம் தாக்கி இளைஞன் மரணம் வவுனியா, ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.குறித்த சம்பவம் இன்று(16) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நேற்றையதினம் இரவு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகனை நீண்ட நேரமாகியும் காணாமையினால் அவரது தந்தை தேடியுள்ளார். இதன்போது காணியின் பின்புறத்தில் குறித்த இளைஞர் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.இதனையடுத்து சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த சம்பவத்தில் 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். அவர் வீட்டின் பின்புறத்தில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement