• Oct 11 2024

செட்டிகுளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் நால்வர் படுகாயம்..!

Sharmi / Aug 16th 2024, 3:42 pm
image

Advertisement

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இனம் தெரியாத நபர்கள் நிகழ்த்திய வாள்வெட்டுத் தாக்குதலில் நான்குபேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்றையதினம் அதிகாலை குறித்த வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த சமயம் இனம்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வீட்டிலிருந்த முதியவர்களான ஐயர் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூவர் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் பறயனாலங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

செட்டிகுளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் நால்வர் படுகாயம். செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இனம் தெரியாத நபர்கள் நிகழ்த்திய வாள்வெட்டுத் தாக்குதலில் நான்குபேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இன்றையதினம் அதிகாலை குறித்த வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த சமயம் இனம்தெரியாத நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இதன்போது வீட்டிலிருந்த முதியவர்களான ஐயர் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூவர் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ள நிலையில் பறயனாலங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement