• Nov 25 2024

பைடனின் உடல்நலம் பற்றி கருத்து கூற நான் வைத்தியர் இல்லை- சர்ச்சையை கிளப்பிய புட்டின்..!samugammedia

mathuri / Feb 16th 2024, 6:22 am
image

அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதை விட ஜோ பைடன் ஜனாதிபதியாக வருவதையே ரஷ்யா விரும்பும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், 

''பைடன் நீண்ட அனுபவம் உடையவர் மட்டுமல்ல, அவர் நடவடிக்கைகளை எளிதில் யூகிக்க கூடியவை. அவர் கடந்தகாலத்து அரசியல் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகளை கொண்டவர்.bஆனால், டொனால்ட் டிரம்ப் அவ்வாறு அல்ல. டிரம்பை பிறரால் புரிந்து கொள்ளவோ அல்லது அவரது நடவடிக்கைகளை யூகிக்கவோ முடியாது.

நேட்டோவில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து டிரம்ப் கொண்டிருக்கும் சிந்தனைகளில் நியாயம் உள்ளது. ஆனால், முடிவு செய்ய வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு. இருப்பினும், அமெரிக்காவில் யார் ஜனாதிபதியாக பதவி ஏற்றாலும் அவர்களுடன் ரஷ்யா இணைந்து பணியாற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். 

இதேவேளை, பைடனின் உடலாரோக்கியம் குறித்து நான் பேசுவது முறையாக இருக்காது. ஆனால்  2021ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் பைடனை நான் சந்தித்த போது அவர் நலமாகத்தான் இருந்தார்." மேலும், பைடனின் உடல்நலம் குறித்து கருத்து தெரிவிக்க நான் வைத்தியர் அல்ல. என்றும் புட்டின் குறிப்பிட்டுள்ளார். 

பைடனின் உடல்நலம் பற்றி கருத்து கூற நான் வைத்தியர் இல்லை- சர்ச்சையை கிளப்பிய புட்டின்.samugammedia அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாவதை விட ஜோ பைடன் ஜனாதிபதியாக வருவதையே ரஷ்யா விரும்பும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், ''பைடன் நீண்ட அனுபவம் உடையவர் மட்டுமல்ல, அவர் நடவடிக்கைகளை எளிதில் யூகிக்க கூடியவை. அவர் கடந்தகாலத்து அரசியல் சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகளை கொண்டவர்.bஆனால், டொனால்ட் டிரம்ப் அவ்வாறு அல்ல. டிரம்பை பிறரால் புரிந்து கொள்ளவோ அல்லது அவரது நடவடிக்கைகளை யூகிக்கவோ முடியாது.நேட்டோவில் அமெரிக்காவின் ஈடுபாடு குறித்து டிரம்ப் கொண்டிருக்கும் சிந்தனைகளில் நியாயம் உள்ளது. ஆனால், முடிவு செய்ய வேண்டியது அமெரிக்காவின் பொறுப்பு. இருப்பினும், அமெரிக்காவில் யார் ஜனாதிபதியாக பதவி ஏற்றாலும் அவர்களுடன் ரஷ்யா இணைந்து பணியாற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். இதேவேளை, பைடனின் உடலாரோக்கியம் குறித்து நான் பேசுவது முறையாக இருக்காது. ஆனால்  2021ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் பைடனை நான் சந்தித்த போது அவர் நலமாகத்தான் இருந்தார்." மேலும், பைடனின் உடல்நலம் குறித்து கருத்து தெரிவிக்க நான் வைத்தியர் அல்ல. என்றும் புட்டின் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement