இந்த நாட்டில் தாம் பாதுகாத்த ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மட்டுமே எனவும் ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் பிரேமதாசவிற்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வந்த போது தாமே முன்வந்து அவரை பாதுகாத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப உதவுமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரம் கிடைத்தால் அதனை பெற்றுக் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிகாரம் கிடைக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ளாதவர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
நாடு மிக நெருக்கடியாக இருந்த காலத்தில் தாம் ஆட்சியை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும், மொட்டு கட்சி தமக்கு ஆதரவு வழங்கியதாகவும், தனியாக நாட்டை மீட்டிருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய தரப்புக்களுக்கு தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை - எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ரணில் இந்த நாட்டில் தாம் பாதுகாத்த ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மட்டுமே எனவும் ராஜபக்சக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.மேலும் பிரேமதாசவிற்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வந்த போது தாமே முன்வந்து அவரை பாதுகாத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.கண்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.எனவே அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்ப உதவுமாறு கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டுள்ளார்.அதிகாரம் கிடைத்தால் அதனை பெற்றுக் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.அதிகாரம் கிடைக்கும் போது அதனை ஏற்றுக்கொள்ளாதவர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.நாடு மிக நெருக்கடியாக இருந்த காலத்தில் தாம் ஆட்சியை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும், மொட்டு கட்சி தமக்கு ஆதரவு வழங்கியதாகவும், தனியாக நாட்டை மீட்டிருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய தரப்புக்களுக்கு தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.