• May 04 2025

கிளிநொச்சியின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தல்; மாவட்ட மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Chithra / May 4th 2025, 2:53 pm
image



2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்

மாவட்டத்தில் 102387 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். 108 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 40 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

1450 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். மாற்றுவலுவுள்ளோருக்கான ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 

மாவட்டத்தில் தனியார் துறைகளில் கடமை புரியும் ஊழியர்களுக்கு சட்ட விதிகளுக்கு அமைய தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் விடுமுறைகளை வழங்கி ஊழியர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துமாறும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் சுயாதீனமான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

கிளிநொச்சியின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தல்; மாவட்ட மக்களுக்கு வெளியான அறிவிப்பு 2025ம் ஆண்டுக்கான கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பதில் அரச அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவிக்கையில்மாவட்டத்தில் 102387 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். 108 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 40 வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.1450 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ளனர். மாற்றுவலுவுள்ளோருக்கான ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தனியார் துறைகளில் கடமை புரியும் ஊழியர்களுக்கு சட்ட விதிகளுக்கு அமைய தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் விடுமுறைகளை வழங்கி ஊழியர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துமாறும், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் சுயாதீனமான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement