• Aug 03 2025

மழையால் தென்பட்ட மோட்டார் குண்டு - திருகோணமலையில் பரபரப்பு

Chithra / Aug 3rd 2025, 12:22 pm
image


திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் 81 ரக மோட்டார் குண்டொன்று இன்று (03) மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிரதான வீதி பெரியபாலம் மூதூர் என்ற முகவரியில் வசித்து வரும் என்.எம்.எம்.நிமாஸ் அஹமட் என்பவருடைய காணியில் குறித்த மோட்டார் குண்டு தென்பட்டுள்ளது. 

மழை காரணமாக குறித்த மோட்டார் குண்டு தென்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

இதனையடுத்து மூதூர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து மூதூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த மோட்டார் குண்டு சேதமடைந்த பழைய மோட்டார் குண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.


மழையால் தென்பட்ட மோட்டார் குண்டு - திருகோணமலையில் பரபரப்பு திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் 81 ரக மோட்டார் குண்டொன்று இன்று (03) மீட்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு பிரதான வீதி பெரியபாலம் மூதூர் என்ற முகவரியில் வசித்து வரும் என்.எம்.எம்.நிமாஸ் அஹமட் என்பவருடைய காணியில் குறித்த மோட்டார் குண்டு தென்பட்டுள்ளது. மழை காரணமாக குறித்த மோட்டார் குண்டு தென்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதனையடுத்து மூதூர் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து மூதூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.குறித்த மோட்டார் குண்டு சேதமடைந்த பழைய மோட்டார் குண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement