முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கான யோசனை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்த யோசனையை உயர் நீதிமன்றத்தில் சவால் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட யோசனையின் கீழ், அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் உத்தியோகபூர்வ குடியிருப்பு, செயலக கொடுப்பனவுக்கான கட்டணம் மற்றும் உத்தியோகபூர்வ போக்குவரத்துகள் ரத்து செய்யப்படுகின்றன.
இந்நிலையில் குறித்த யோசனை அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளும், 97,500 ரூபாய் என்ற மாதாந்த ஓய்வூதியத்தைத் தவிர அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் ரத்து; ரணில் - மைத்திரி திடீர் சந்திப்பு முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கான யோசனை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்த யோசனையை உயர் நீதிமன்றத்தில் சவால் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் விவாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தால் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட யோசனையின் கீழ், அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் உத்தியோகபூர்வ குடியிருப்பு, செயலக கொடுப்பனவுக்கான கட்டணம் மற்றும் உத்தியோகபூர்வ போக்குவரத்துகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்நிலையில் குறித்த யோசனை அதன் தற்போதைய வடிவத்தில் நிறைவேற்றப்பட்டால், ஐந்து முன்னாள் ஜனாதிபதிகளும், 97,500 ரூபாய் என்ற மாதாந்த ஓய்வூதியத்தைத் தவிர அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.