• Aug 03 2025

உணவு ஒவ்வாமையால் 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Chithra / Aug 3rd 2025, 10:20 am
image

 உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பொலன்னறுவையில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா வந்த மாணவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

குறித்த மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, தலைசுற்று, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

நேற்று, சுமார் 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிலர் சிகிச்சைகளுக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். 

இன்னும் சில மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.


உணவு ஒவ்வாமையால் 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி  உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவையில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா வந்த மாணவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, தலைசுற்று, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நேற்று, சுமார் 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிலர் சிகிச்சைகளுக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர். இன்னும் சில மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement