• Aug 03 2025

கூரிய வாள்கள், ஐஸ் போதைப் பொருட்களுடன் 19 நபர்கள் கைது

Chithra / Aug 3rd 2025, 10:26 am
image


கூரிய வாள்கள், ஐஸ் போதைப் பொருட்களுடன் 19 சந்தேக நபர்கள் நேற்று மாலை மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகத்திற்கிடமான முறையில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில் ஒரு குழுவினர் ஒன்று கூடியுள்ளதாக மூதூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பிரகாரம் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக  பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டினை முற்றுகையிட்டனர்.

இதன்போது 19 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 4 கூரிய வாள்கள்,  இரண்டு ஐஸ் போதைப் பொருள் பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று, தோப்பூர், மூதூர், பச்சநூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன், இவர்களை மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


கூரிய வாள்கள், ஐஸ் போதைப் பொருட்களுடன் 19 நபர்கள் கைது கூரிய வாள்கள், ஐஸ் போதைப் பொருட்களுடன் 19 சந்தேக நபர்கள் நேற்று மாலை மூதூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பிரதேசத்தில் ஒரு குழுவினர் ஒன்று கூடியுள்ளதாக மூதூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் பிரகாரம் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைவாக  பொலிஸ் குழுவினர் குறித்த வீட்டினை முற்றுகையிட்டனர்.இதன்போது 19 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 4 கூரிய வாள்கள்,  இரண்டு ஐஸ் போதைப் பொருள் பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று, தோப்பூர், மூதூர், பச்சநூர் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.இவர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதுடன், இவர்களை மூதூர் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement