மாத்தறை கபுகம பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் 48 வயதான நபரொருவர் காயமடைந்து, மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையை உலுக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - மேலுமொருவர் படுகாயம் மாத்தறை கபுகம பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் வீட்டினுள் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 48 வயதான நபரொருவர் காயமடைந்து, மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.