• Aug 03 2025

கிண்ணியாவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவுவதாக பாகிஸ்தான் தூதுவர் உறுதி

Chithra / Aug 3rd 2025, 3:47 pm
image

 

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் உடன்   Serendip foundation இன் பணிப்பாளர் ஜமால்தீன் அமானுள்ளா சந்தித்து கிண்ணியா எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்தார்.

இச்சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்தில் இன்று இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலின்போது திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்துவதற்காக தன்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தூதுவர் உறுதிமொழி வழங்கினார்.

இந்நிகழ்வில் Serendip foundation இன் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஜமால்தீன் அன்வருள்ளா மற்றும் விவசாய உத்தியோகத்தர் முகமட் நிஹாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


கிண்ணியாவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உதவுவதாக பாகிஸ்தான் தூதுவர் உறுதி  பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் உடன்   Serendip foundation இன் பணிப்பாளர் ஜமால்தீன் அமானுள்ளா சந்தித்து கிண்ணியா எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்தார்.இச்சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்தில் இன்று இடம்பெற்றது.இக் கலந்துரையாடலின்போது திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்துவதற்காக தன்னாலான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தூதுவர் உறுதிமொழி வழங்கினார்.இந்நிகழ்வில் Serendip foundation இன் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஜமால்தீன் அன்வருள்ளா மற்றும் விவசாய உத்தியோகத்தர் முகமட் நிஹாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement