• Apr 07 2025

ராமர் பாலத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது; மோடியின் நெகிழ்ச்சி பதிவு

Chithra / Apr 6th 2025, 3:20 pm
image

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை இன்று  திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

அதில்,  இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் பாலத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அயோத்தியில் சூரியத் திலகர் விழா நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் இது நிகழ்ந்தது. இருவரின் தரிசனமும் கிடைத்த பாக்கியம். பிரபு ஸ்ரீராம் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி. அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும். என தான் விமானத்தில் சென்று கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இலங்கை வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மண்டபம் செல்லவுள்ள நிலையில் குறித்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்தின் மத்திய பகுதிக்கு சென்றுபுதிய பாம்பன் தொடருந்து பாலத்தை கொடி அசைத்து திறந்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்திலிருந்து புறப்பட்டு நேராக இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை, இராமேஸ்வரம் - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும்.

அதுபோல இராமேஸ்வரம் நகரத்திற்குள் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் அறிவித்துள்ளது.

ராமர் பாலத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது; மோடியின் நெகிழ்ச்சி பதிவு  இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய தொடருந்து பாலத்தை இன்று  திறந்து வைக்கவுள்ளார்.இந்நிலையில் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதில்,  இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் பாலத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. அயோத்தியில் சூரியத் திலகர் விழா நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் இது நிகழ்ந்தது. இருவரின் தரிசனமும் கிடைத்த பாக்கியம். பிரபு ஸ்ரீராம் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி. அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும். என தான் விமானத்தில் சென்று கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இலங்கை வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து மண்டபம் செல்லவுள்ள நிலையில் குறித்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன் அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலத்தின் மத்திய பகுதிக்கு சென்றுபுதிய பாம்பன் தொடருந்து பாலத்தை கொடி அசைத்து திறந்து வைக்கவுள்ளார்.தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்திலிருந்து புறப்பட்டு நேராக இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை, இராமேஸ்வரம் - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும்.அதுபோல இராமேஸ்வரம் நகரத்திற்குள் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement