• Apr 07 2025

கிண்ணியா பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கைப்பற்றும்! - முஹம்மது சபீல்

Chithra / Apr 6th 2025, 3:18 pm
image


உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கைப்பற்றும் என, அதன் பொதுச்செயலாளர் அஷ் ஷெய்ஹ் ஏ. எல். முஹம்மது சபீல் தெரிவித்தார். 

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக, கிண்ணியா பிரதேச சபைக்காக போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு, கிண்ணியா நடுத்தீவு விடுதியில் நேற்றுமாலை இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுச்செயலாளர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. இங்கு தூய்மையான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 

கிண்ணியா பிரதேச சபையையின் அதிகாரம் எமக்கு கிடைக்கின்ற போது, இந்த சபையை இலங்கையில் இருக்கின்ற 336 சபைகளுக்கும் ஒரு முன்மாதிரியான சபையாக மாற்றுவோம்.

இன, மத, அரசியல் பேதமற்ற நாட்டை கட்டி எழுப்புவோம் என கூறிக்கொண்டு, அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதியின் செயற்பாடுகள், தற்போது முற்றிலும் மாறுபட்ட நிலையில், சென்று கொண்டிருப்பதை வேதனையோடு நோக்க வேண்டி இருக்கின்றது.

குறிப்பாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக இளைஞன் கைது செய்யப்பட்டமை குறித்து, முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

இளைஞனின் கைது தொடர்பாக காவல்துறையினர் ஒரு கதையையும் அமைச்சரவை இன்னொரு கதையையும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்த விடயத்தில் குறித்த இளைஞன், புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என உலமா சபை கூறியதாக காவல்துறையினர் தெரிவித்ததை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் மறுத்துள்ளது.

இந்த நிலையில் இவ்வாறான செயற்பாடு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளை பாதுகாப்பதற்கு என்று தெரிவிக்கப்படுகின்ற மற்றொரு கதையும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த நிலை தொடர்பாக, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்த அனைவரும் கவலை அடைந்துள்ளனர்.


இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி, அதனுடைய இறையாண்மையை பாதுகாத்து வருகின்ற, முஸ்லிம் சமூகத்தின் மீது, இவ்வாறு சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது, இந்த நாட்டின் முஸ்லிம்கள் மத்தியில் கவலையும் வேதனையும் ஏற்படுத்தி உள்ளது.

சிறுவர்களையும், பெண்களையும் நோயாளர்களையும் ஈவிரக்கமின்றி தனது கொடுங்கோன்மையை கட்டவிழ்த்துவிட்டுள்ள இஸ்ரேலின் அராஜகத்தை ஆதரிப்பதாகவே இந்த நாட்டின் செயற்பாடு தற்போது அமைந்துள்ளது. 

எனவே, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை, நல்லாட்சிகான  தேசிய முன்னணியின் கோரிக்கையாகும் என்றும் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கைப்பற்றும் - முஹம்மது சபீல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கைப்பற்றும் என, அதன் பொதுச்செயலாளர் அஷ் ஷெய்ஹ் ஏ. எல். முஹம்மது சபீல் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக, கிண்ணியா பிரதேச சபைக்காக போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு, கிண்ணியா நடுத்தீவு விடுதியில் நேற்றுமாலை இடம்பெற்றது.இக்கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பொதுச்செயலாளர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுகின்றது. இங்கு தூய்மையான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கிண்ணியா பிரதேச சபையையின் அதிகாரம் எமக்கு கிடைக்கின்ற போது, இந்த சபையை இலங்கையில் இருக்கின்ற 336 சபைகளுக்கும் ஒரு முன்மாதிரியான சபையாக மாற்றுவோம்.இன, மத, அரசியல் பேதமற்ற நாட்டை கட்டி எழுப்புவோம் என கூறிக்கொண்டு, அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதியின் செயற்பாடுகள், தற்போது முற்றிலும் மாறுபட்ட நிலையில், சென்று கொண்டிருப்பதை வேதனையோடு நோக்க வேண்டி இருக்கின்றது.குறிப்பாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக இளைஞன் கைது செய்யப்பட்டமை குறித்து, முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.இளைஞனின் கைது தொடர்பாக காவல்துறையினர் ஒரு கதையையும் அமைச்சரவை இன்னொரு கதையையும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்த விடயத்தில் குறித்த இளைஞன், புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என உலமா சபை கூறியதாக காவல்துறையினர் தெரிவித்ததை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையும் மறுத்துள்ளது.இந்த நிலையில் இவ்வாறான செயற்பாடு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகளை பாதுகாப்பதற்கு என்று தெரிவிக்கப்படுகின்ற மற்றொரு கதையும் தற்போது வெளிவந்துள்ளது. இந்த நிலை தொடர்பாக, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்த அனைவரும் கவலை அடைந்துள்ளனர்.இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி, அதனுடைய இறையாண்மையை பாதுகாத்து வருகின்ற, முஸ்லிம் சமூகத்தின் மீது, இவ்வாறு சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது, இந்த நாட்டின் முஸ்லிம்கள் மத்தியில் கவலையும் வேதனையும் ஏற்படுத்தி உள்ளது.சிறுவர்களையும், பெண்களையும் நோயாளர்களையும் ஈவிரக்கமின்றி தனது கொடுங்கோன்மையை கட்டவிழ்த்துவிட்டுள்ள இஸ்ரேலின் அராஜகத்தை ஆதரிப்பதாகவே இந்த நாட்டின் செயற்பாடு தற்போது அமைந்துள்ளது. எனவே, பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதை, நல்லாட்சிகான  தேசிய முன்னணியின் கோரிக்கையாகும் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement