• Sep 20 2024

காசாவில் உணவு இன்றி தவித்தேன் - ஒரு பாண் துண்டிற்காக பெரிதும் கஸ்ரப்பட்டேன் - அவுஸ்திரேலிய பெண் ஒருவர் கதறல்..! samugammedia

Tamil nila / Nov 2nd 2023, 6:04 pm
image

Advertisement

இஸ்ரேல் காசா போர் காரணமாக காசாவில் சிக்குண்டிருந்த நிலையில் தற்போது எகிப்திற்கு சென்றுள்ள அவுஸ்திரேலியர்கள் காசாவில் தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர்.

காசா, இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களையும் இஸ்ரேலின் முற்றுகையையும் எதிர்கொண்டுள்ள நிலையில் எகிப்துடனான ரஃபா  Rafah எல்லை ஊடாக உலக நாடுகளை சேர்ந்தவர்கள் வெளியேறுவதற்கு முதல் முறையாக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வெளியேறியுள்ள அவர்கள் தாங்கள் அனுபவித்த துயரங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய ரபா எல்லை ஊடாக வெளியேறியவர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய பெண்ணான மொனா தனது குடும்பத்தை காசாவில் விட்டுவிட்டு வந்துள்ளமை குறித்து கண்ணீர் மல்க கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது காசாவில் உணவை பெறுவது மிகவும் கடினமானது மற்றும் ஆபத்தானது எனவும்; அதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பசியை போக்கி கொள்வதற்காக ஒரு துண்டு பாணை பெற்றுக் கொள்வதற்காக மிகவும் கஸ்டப்பட்டேன் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதனிடையே சிறுவர்களின் பசியை போக்குவதற்காக அதனை கஸரப்பட்டு பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எங்கள் குடும்பத்தில் 17 சிறுவர்கள் உள்ளனர் எனினும் குறித்த சிறுவர்களுக்கு கூட கடந்த இரண்டு நாட்களாக உணவும் நீரும் இல்லாமல் வேதனை பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து பேசிய அவர் தற்போது நான் காசாவில் இருந்து தப்பி வந்தாலும் நான் எனது குடும்பத்தை பார்க்கப்போகின்றேன் என ஒருபுறம் சந்தோசமடைந்தாலும் எனது சகோதரர்களை இன்றும் சிலரை காசாவில் விட்டு வந்துள்ளேன் இதனால் நான் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காசாவில் அவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனினும் அங்கு நிலைமை மிக மிகமோசமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.

இதனிடையே அமெரிக்கா, கத்தார் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக ரஃபா எல்லை முதன் முதலாக திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


காசாவில் உணவு இன்றி தவித்தேன் - ஒரு பாண் துண்டிற்காக பெரிதும் கஸ்ரப்பட்டேன் - அவுஸ்திரேலிய பெண் ஒருவர் கதறல். samugammedia இஸ்ரேல் காசா போர் காரணமாக காசாவில் சிக்குண்டிருந்த நிலையில் தற்போது எகிப்திற்கு சென்றுள்ள அவுஸ்திரேலியர்கள் காசாவில் தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளனர்.காசா, இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சுக்களையும் இஸ்ரேலின் முற்றுகையையும் எதிர்கொண்டுள்ள நிலையில் எகிப்துடனான ரஃபா  Rafah எல்லை ஊடாக உலக நாடுகளை சேர்ந்தவர்கள் வெளியேறுவதற்கு முதல் முறையாக அனுமதிக்கப்பட்டனர்.இந்த நிலையில் வெளியேறியுள்ள அவர்கள் தாங்கள் அனுபவித்த துயரங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.இதற்கமைய ரபா எல்லை ஊடாக வெளியேறியவர்களில் ஒருவரான அவுஸ்திரேலிய பெண்ணான மொனா தனது குடும்பத்தை காசாவில் விட்டுவிட்டு வந்துள்ளமை குறித்து கண்ணீர் மல்க கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது காசாவில் உணவை பெறுவது மிகவும் கடினமானது மற்றும் ஆபத்தானது எனவும்; அதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் பசியை போக்கி கொள்வதற்காக ஒரு துண்டு பாணை பெற்றுக் கொள்வதற்காக மிகவும் கஸ்டப்பட்டேன் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.இதனிடையே சிறுவர்களின் பசியை போக்குவதற்காக அதனை கஸரப்பட்டு பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், எங்கள் குடும்பத்தில் 17 சிறுவர்கள் உள்ளனர் எனினும் குறித்த சிறுவர்களுக்கு கூட கடந்த இரண்டு நாட்களாக உணவும் நீரும் இல்லாமல் வேதனை பட்டதாக தெரிவித்துள்ளார்.இதன்போது தொடர்ந்து பேசிய அவர் தற்போது நான் காசாவில் இருந்து தப்பி வந்தாலும் நான் எனது குடும்பத்தை பார்க்கப்போகின்றேன் என ஒருபுறம் சந்தோசமடைந்தாலும் எனது சகோதரர்களை இன்றும் சிலரை காசாவில் விட்டு வந்துள்ளேன் இதனால் நான் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.மேலும் காசாவில் அவர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனினும் அங்கு நிலைமை மிக மிகமோசமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்;டுள்ளார்.இதனிடையே அமெரிக்கா, கத்தார் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக ரஃபா எல்லை முதன் முதலாக திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement