• Nov 19 2024

13 வது திருத்தத்தை முழுமையாக அமுலாக்குவேன்; இந்திய உறவை வலுப்படுத்துவேன்- யாழில் சஜித் உறுதி..!

Sharmi / Sep 1st 2024, 10:20 pm
image

13 வது திருத்தச் சட்டம் அரசியல் யாப்பில் உள்ளவாறாக அமுல்படுத்தப்பட்டு மாகாண சபைகள் வலுப்படுத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று(01)  காலை ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தனது அரசியல்- பொருளாதார நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்று உறுதியாகத் தெரிவிக்கும் ஒரேயொரு  வேட்பாளர் தான் மட்டுமே.

ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றி நிச்சயமானது.

மேலும் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும்  அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றியீட்டி அரசாங்கத்தை அமைக்கும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

அதேவேளை, 13 வது திருத்தத்தை அமுலாக்க வேண்டியது நாட்டின் எதிர்கால சமாதானத்துக்கும் அபிவிருத்திக்கும் அவசியமானதாகும்.

அது தேர்தலுக்கான  வெறும் அரசியல் கோசம் அல்லவென்றும் அது தான் தாய் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றினால் எடுக்கப்படும் முடிவாகும்.

நாட்டின் பொருளாதாரக் கொள்கையை தான்  வலதுசாரித் துருவத்துக்கோ இடதுசாரித் துருவத்துக்கோ இழுத்துச் செல்லாமல் இடைப்பட்டபட்ட நடுவுப் பதையூடான கொள்கை முன்னெடுப்பாக மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். 

ஜனநாயகமும் மானிட மூகமும் மிக்க  சமூகமயப்பட்ட சந்தைப் பொருளாதாரமே தனது பொருளாதாரக் கொள்கை எனவும் அவர் தெளிவு படுத்தினார்.

மக்களுக்கு சமத்துவமும் சமவாய்ப்பும் வழங்கும் மக்கள் நேயம் மிக்க, சூழல் பாதுகாப்பு மிக்க பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும்.

நாட்டைச் சூறையாடிய நபர்களிடமிருந்து சொத்துக்களும் பணமும் மீட்டெடுக்கப்படும். அதற்கான சட்டமும்  புதிய பாராளுமன்றில் கொண்டுவரப்படும்.

தமிழர்களோ முஸ்லிம்களோ மலையகத் தமிழரோ, பறங்கி இனத்தவரோ, அனைவரும் சட்டத்தின் முன் சமமாக மதித்துப் பேணப்படுவர்.

கொரோனாவால் இறந்த முஸ்லிம் மக்களின் ஜனாசாக்கள் கோட்டா அரசாங்கத்தால் இஸ்லாமிய முறைமைக்கு மாறாக எரிக்கப்பட்டபோது, அதற்கெதிராக ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே வீதிக்கிறங்கிப் போராடிய கட்சி எனவும் அவர் கூறினார்.

மகிந்த ராஜபக்ச பிரதமர் கதிரையிலிருந்து இறங்கியபோது கோட்டாபய தன்னைப் பிரதமர் பதவியை ஏற்கும்படி கேட்டபோது  தான் மறுத்துவிட்டதை ஞாபகப்படுத்திய சஜித், தான் மறுத்தமைக்கு இரண்டு  காரணங்கள் இருந்தன எனவும் குறிப்பிட்டார்.

 நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்திருந்த ராஜபக்ச குடும்பத்திற்கு அடிமைப் பிரதமராகப் பணியாற்ற தான் விரும்பவில்லையென்றும் தான் மக்களிடம் புதிய ஆணையை தேர்தல் மூலம் பெற்று மக்களுக்கு சேவையாற்றவே விரும்பியதாகவும் தெரிவித்தார். 

இந்தியா உலகில் இன்று ஒரு வல்லரசு என்றும் அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் வகிக்கும் ஐந்து நாடுகளுடன் ஆறாவதாக இணையும் நிலையுள்ளது.

பூகோள ரீதியில் எமக்கருகில் அமைந்திருக்கும் அத்தகைய இந்திய வல்லரசு இலங்கையின் வரலாற்றோடும் பண்பாட்டுடனும் மிக நெருங்கிய தொடர்புள்ளது. 

தனக்கும் இந்தியாவுக்கும் மிக நல்லுறவு உள்ளது என்றும் இந்திய உறவைப் பேணி வளர்க்கும் வெளிவிவகாரக் கொள்கை தனது ஆட்சியில் கடைப்பிடிக்கப்படும் எனவும் சஜித் தெரிவித்தார்.

 இந்தியாவோ சீனாவோ எந்த வல்லரசுகளாயினும் இலங்கையின் தேசிய நலன் களைப் பேணிப் பாதுகாக்கும் அடிப்படையிலேயே தனது ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை அமையும்.

தனது தந்தையார் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா ஒரு நேர்மையான திடமான அரசியல் தலைவர்.

ஆயினும் அவர் இந்திய உறவு தொடர்பில் கடைப்பிடித்த கொள்கைகள் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தான் ஒருபோதும் தனது தந்தையார் இந்திய உறவு தொடர்பில் கடைப்பிடித்த நிலைப்பாட்டில் இல்லையென்றும் தன்னிடம் புதிய அணுகுமுறைகளே உள்ளன எனவும்  சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

13 வது திருத்தத்தை முழுமையாக அமுலாக்குவேன்; இந்திய உறவை வலுப்படுத்துவேன்- யாழில் சஜித் உறுதி. 13 வது திருத்தச் சட்டம் அரசியல் யாப்பில் உள்ளவாறாக அமுல்படுத்தப்பட்டு மாகாண சபைகள் வலுப்படுத்தப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று(01)  காலை ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தனது அரசியல்- பொருளாதார நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தும் போதே இவ்வாறு தெரிவித்தார்.13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் என்று உறுதியாகத் தெரிவிக்கும் ஒரேயொரு  வேட்பாளர் தான் மட்டுமே.ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றி நிச்சயமானது.மேலும் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும்  அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றியீட்டி அரசாங்கத்தை அமைக்கும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அதேவேளை, 13 வது திருத்தத்தை அமுலாக்க வேண்டியது நாட்டின் எதிர்கால சமாதானத்துக்கும் அபிவிருத்திக்கும் அவசியமானதாகும். அது தேர்தலுக்கான  வெறும் அரசியல் கோசம் அல்லவென்றும் அது தான் தாய் நாட்டின் மீது கொண்டுள்ள பற்றினால் எடுக்கப்படும் முடிவாகும்.நாட்டின் பொருளாதாரக் கொள்கையை தான்  வலதுசாரித் துருவத்துக்கோ இடதுசாரித் துருவத்துக்கோ இழுத்துச் செல்லாமல் இடைப்பட்டபட்ட நடுவுப் பதையூடான கொள்கை முன்னெடுப்பாக மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். ஜனநாயகமும் மானிட சமூகமும் மிக்க  சமூகமயப்பட்ட சந்தைப் பொருளாதாரமே தனது பொருளாதாரக் கொள்கை எனவும் அவர் தெளிவு படுத்தினார். மக்களுக்கு சமத்துவமும் சமவாய்ப்பும் வழங்கும் மக்கள் நேயம் மிக்க, சூழல் பாதுகாப்பு மிக்க பொருளாதார முறைமை அறிமுகப்படுத்தப்படும்.நாட்டைச் சூறையாடிய நபர்களிடமிருந்து சொத்துக்களும் பணமும் மீட்டெடுக்கப்படும். அதற்கான சட்டமும்  புதிய பாராளுமன்றில் கொண்டுவரப்படும்.தமிழர்களோ முஸ்லிம்களோ மலையகத் தமிழரோ, பறங்கி இனத்தவரோ, அனைவரும் சட்டத்தின் முன் சமமாக மதித்துப் பேணப்படுவர்.கொரோனாவால் இறந்த முஸ்லிம் மக்களின் ஜனாசாக்கள் கோட்டா அரசாங்கத்தால் இஸ்லாமிய முறைமைக்கு மாறாக எரிக்கப்பட்டபோது, அதற்கெதிராக ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே வீதிக்கிறங்கிப் போராடிய கட்சி எனவும் அவர் கூறினார்.மகிந்த ராஜபக்ச பிரதமர் கதிரையிலிருந்து இறங்கியபோது கோட்டாபய தன்னைப் பிரதமர் பதவியை ஏற்கும்படி கேட்டபோது  தான் மறுத்துவிட்டதை ஞாபகப்படுத்திய சஜித், தான் மறுத்தமைக்கு இரண்டு  காரணங்கள் இருந்தன எனவும் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்திருந்த ராஜபக்ச குடும்பத்திற்கு அடிமைப் பிரதமராகப் பணியாற்ற தான் விரும்பவில்லையென்றும் தான் மக்களிடம் புதிய ஆணையை தேர்தல் மூலம் பெற்று மக்களுக்கு சேவையாற்றவே விரும்பியதாகவும் தெரிவித்தார். இந்தியா உலகில் இன்று ஒரு வல்லரசு என்றும் அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் வகிக்கும் ஐந்து நாடுகளுடன் ஆறாவதாக இணையும் நிலையுள்ளது. பூகோள ரீதியில் எமக்கருகில் அமைந்திருக்கும் அத்தகைய இந்திய வல்லரசு இலங்கையின் வரலாற்றோடும் பண்பாட்டுடனும் மிக நெருங்கிய தொடர்புள்ளது.  தனக்கும் இந்தியாவுக்கும் மிக நல்லுறவு உள்ளது என்றும் இந்திய உறவைப் பேணி வளர்க்கும் வெளிவிவகாரக் கொள்கை தனது ஆட்சியில் கடைப்பிடிக்கப்படும் எனவும் சஜித் தெரிவித்தார். இந்தியாவோ சீனாவோ எந்த வல்லரசுகளாயினும் இலங்கையின் தேசிய நலன் களைப் பேணிப் பாதுகாக்கும் அடிப்படையிலேயே தனது ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை அமையும்.தனது தந்தையார் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசா ஒரு நேர்மையான திடமான அரசியல் தலைவர்.ஆயினும் அவர் இந்திய உறவு தொடர்பில் கடைப்பிடித்த கொள்கைகள் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தான் ஒருபோதும் தனது தந்தையார் இந்திய உறவு தொடர்பில் கடைப்பிடித்த நிலைப்பாட்டில் இல்லையென்றும் தன்னிடம் புதிய அணுகுமுறைகளே உள்ளன எனவும்  சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement